நான் ஒரு சாதாரண கூத்தாடி அவ்வளவுதான் என பாக்கியலட்சுமி கோபி வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்த சீரியலையும் தாங்கிப் பிடித்து வருபவர் சதீஷ்.

எதிர்மறையான கதாபாத்திரமாக இருந்தாலும் தன்னுடைய நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாராட்டுகளை அள்ளி வருகிறார். தினந்தோறும் சமூக வலைதள பக்கங்களில் போட்டோ வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் நான் ஒரு சாதாரண நடிகர் அவ்வளவு தான் கதை எப்படி போகிறதோ என்ன சொல்கிறார்களோ அதை நடிக்கிறோம். அடுத்து கதை எப்படி நகர வேண்டும் என்பது எல்லாம் தீர்மானிப்பது தொலைக்காட்சி தான். அவர்கள் சொல்வதை ரைட்டர் எழுதிக் கொடுக்கிறார். அதை இயக்குனர் இயக்கி கொடுக்கிறார். மற்றபடி அவரும் எதுவும் செய்ய முடியாது.

ப்ரோமோ வீடியோக்களில் இயக்குனர் மற்றும் நடிகர்களை திட்டுவதை தயவுசெய்து செய்யாதீர்கள். என்னுடைய நடிப்பில் ஏதாவது குறை இருந்தால் தவறு இருந்தால் நீங்கள் தாராளமாக அதை என்னிடம் பகிர்ந்து கொள்ளலாம் என கூறியுள்ள அவர் நான் ஒரு சாதாரண கூத்தாடி அவ்வளவு தான் என தெரிவித்துள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/reel/CuNsuVDrHAr/?igshid=MzRlODBiNWFlZA==
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.