பிக்பாஸ் ஷிவானி நாராயணன் புதிதாக பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

Shivani With New BMW Car : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். இந்த சீரியலை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நடித்தார். ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட இந்த சீரியல் மீண்டும் ஒளிபரப்பாகவில்லை.

புதிய BMW கார் வாங்கிய ஷிவானி நாராயணன் - அதோட விலை மட்டும் எவ்வளவு தெரியுமா??

அதன் பின்னர் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் கலந்துகொண்டு பாலாஜி முருகதாஸை காதலித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி விட்டு வெளியே வந்ததும் இவர்களின் காதல் என்னவானது என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை.

மேட்ச் மிரட்டல் : ஒரு செம பவுலரின், ‘தெறி’ சாதனையும், டீன் ஏஜில் ஓய்வு பெற்ற ஒரு வீரரும்..

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி நாராயணன் வழக்கம்போல 5 மணிக்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். இந்த நிலையில் தற்போது அவர் புதிதாக பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

Valimai & Maanaadu இரண்டாவது சிங்கிள் எப்போது Release? – அப்டேட் சொன்ன Venkat Prabhu! | HD

தன்னுடைய புதிய காருடன் போஸ் கொடுத்து புகைப்படங்களை சிவானி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த காரின் விலை 40 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ கார் வாங்கிய ஷிவானிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.