விஜயின் லியோ பட பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ள கிரிக்கெட் வீரரின் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அண்மையில் நிறைவடைந்ததாக படக்குழு தெரிவித்திருந்தது. அனிருத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான “நான் ரெடி தான் வரவா” பாடல் கடந்த மாதம் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது.

தற்போது வரை பட்டி தொட்டி எங்கும் சூப்பர் ஹிட் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் இப்பாடலை பலரும் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ செய்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இப்பாடலுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ரீல்ஸ் செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் பயங்கரமாக ட்ரெண்டிங்காகி வருகிறது.