பாக்யாவுக்கு புது சிக்கல் உருவாக காபிக்காக ராதிகாவின் அல்லோல் படுகிறார் ஈஸ்வரி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வி ஜே விஷாலுக்கு பதில் புதிய எழில் மாற்றப்பட அவர் புது படத்தின் கதையை ஒரு தயாரிப்பாளரிடம் சொல்வதற்காக தாத்தா மற்றும் பாக்கியாவிடம் ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு கிளம்பி செல்கிறார்.

இதைத்தொடர்ந்து ராமமூர்த்தி நான் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன் என்று ரூமுக்கு செல்ல பாக்யா நான் ரெஸ்டாரன்ட் போகாம வீட்ல இருந்து உங்கள பார்த்துக்கிறேன் என்று சொல்ல ராமமூர்த்தி அதெல்லாம் ஒன்னும் வேணாம்மா வேலையை பாரு என்று சொல்கிறார். சரி மாமா அப்படின்னா அமிர்தா வீட்ல இருந்து வேலைகளை பார்த்து கட்டும் என்று சொல்ல நீ சொன்ன கேட்கவா போற என்று ராமமூர்த்தி ரூமுக்கு சென்று விடுகிறார்.

ஜெனி நான் தான் வீட்ல இருக்கேன் நான் தாத்தாவை பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்ல வேணாம் அண்ணி நீ குழந்தை பாத்துக்குவ அமிர்தா வீட்டுல இருந்து பார்த்துக்கட்டும் என சொல்கிறார். இதைத் தொடர்ந்து பாக்கியா என்னிடம் இன்றைக்கு பால்கார் வருவார் பணம் கொடுக்கணும், eb-ல இருந்து ரீடிங் எடுக்க வருவாங்க. பேப்பர் காரில் வருவாங்க அவருக்கு காசு கொடுக்கணும். மாமாவுக்கு சாப்பிடுவதற்கு முன்னாடி சாப்பிடுவதற்கு பின்னாடி மாத்திரை கொடுக்கணும் என்று சொல்லி சரி நீ மறந்து விடுவ நான் ஒரு பேப்பர்ல எழுதி கொடுத்துட்டு போறேன் என்று எல்லா வேலையும் எழுதி அதையும் ஜெனியிடம் கொடுக்காமல் நான் இதை டேபிள்லயே வைக்கிறேன். அமிர்தாவுக்கு ஒரு மெசேஜ் போட்டு இருந்தேன் அவ பார்த்துட்டு வா என்று சொல்லி நீ போய் குழந்தையை பார்த்துக்க என அனுப்பி வைக்கிறார்.

பாக்கிய இப்படி செய்தது ஜெனியின் முகம் மாறிவிடுகிறது. பிறகு செழியன் வீட்டுக்கு வர ஜெனி டல்லாக இருப்பதை பார்த்து என்னாச்சு என்று கேட்க ஒன்றும் இல்லை என்று சமாளிக்கிறார். வீட்டு வேலைகளை நான் பொறுப்பா பார்க்க மாட்டேனா அதை ஏன் அமிர்தா கிட்ட சொல்றாங்க என்று கேட்க அமிர்தாவுக்கு அதெல்லாம் பார்த்து பழக்கம் இருக்கு அதனால சொல்றாங்க நீ இதை எல்லாம் நினைச்சு கவலைப்படாதே என்று செழியன் சொல்லி விட்டு கிளம்பி விடுகிறார்.

ராதிகா கமலா மயூ ஆகியோர் காபி குடித்துக்கொண்டிருக்க தூக்கத்திலிருந்து எடுங்க ஈஸ்வரி காப்பி காப்பி என கத்த ராதிகா எழுந்துக்க கமலா அவங்க என்ன பண்ணுங்க கூப்பிடறாங்க காபி இல்லன்னு கூப்பிடுறாங்க உட்காரு என உட்கார வைக்கிறார். பிறகு நீ போய் ரெஸ்ட் எடு நான் அவங்களுக்கு காபி போட்டு தரேன் என்று சொல்கிறார்.

இதைத் தொடர்ந்து பாக்கியா ரெஸ்டாரன்ட் இருக்கும்போது பக்கத்தில் இருக்கும் ஒரு கடைக்கு பெயிண்ட் அடித்து ரெடி ஆகிக் கொண்டிருக்க அந்த கடையில் ஓனர் பாக்யாவிடம் முன்பே நீங்கள் தான் ரெஸ்டாரன்ட் ஓனரா என்று கேட்கிறார். பிறகு நான் தான் பக்கத்துல இருக்குற கடையை வாங்கி இருக்கேன் ரெடி பண்ணிட்டு இருக்கேன் கூடிய சீக்கிரம் திறந்து விடுவோம் என்று சொல்ல பாக்கியா என்ன கடை வருகிறது என்று கேட்கிறார். இதை சுற்று வட்டாரத்தில் நல்ல ஒரு பார் கிடையாது. அதனால இங்க பார் கடையில தான் திறக்க போறேன் என்று சொல்கிறார். இனிமே உங்களுக்கு வியாபாரம் நல்லா நடக்கும்.. பாருக்கு வரவங்க எல்லாம் உங்க ஹோட்டலுக்கு வந்து சாப்பிட்டு தான் போவாங்க என்று சொல்கிறார்.

பிறகு பாக்கியா இந்த விஷயத்தை செல்வி மற்றும் மற்றவர்களிடம் சொல்ல அவர்கள் அதெல்லாம் சரியா இருக்காது அங்க பார் வரக்கூடாது என்று கூறுகின்றனர். இத பத்தி பேசி அதை தடுத்து நிறுத்தனும் என்று பாக்யாவுக்கு எடுத்துச் சொல்கின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.