சிட்டியின் பிளானுக்கு ஸ்மார்ட் ஆக ஆப்பு வைத்துள்ளார் முத்து.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் சத்தியா புது துணி மாலை என எல்லாவற்றையும் வாங்கி வந்து வாசலில் நிற்க அதை பார்த்து முத்துவுக்கு கோபம் அதிகமாக மீனா முத்துவின் கையை பிடித்து நிலைமையை சமாளிக்கிறார்.

அதன் பிறகு அண்ணாமலை சத்யாவை பார்த்து ஏதோ காலேஜ் போயிருக்கிறதா சொன்னாங்க என்று கேட்கிறார். ஆமா மாமா காலேஜுக்கு தான் போய் இருந்தேன் இன்னைக்கு அக்கா மாமாவுக்கு கல்யாண நாள் இல்லையா அதனால
நானே சுயமா சம்பாதிச்சு பணத்துல எல்லாத்தையும் வாங்கிட்டு வந்து இருக்கேன் என்று சொல்லி உள்ளே வருகிறார்.

என்னங்க மாமா என்னுடைய காசுல நான் உங்களுக்காக பார்த்து பார்த்து வாங்குன சட்டை உங்களுக்கு பிடிச்ச கலர்ல தான் வாங்கி இருக்கேன் என புது துணிகளை நீட்ட முத்து அதை வாங்கி பாக்ஸை பிரித்து சட்டையை எடுத்து போட்டுக் கொள்கிறார். என் மச்சான் வாங்கி கொடுத்த சட்டை போடாம இருக்க முடியுமா? எனக்கு புடிச்ச கலர்ல எனக்கு ஏத்த மாதிரி கரெக்டா இருக்குடா என்று சிரித்துக் கொண்டே செல்ல சத்யாவின் முகம் மாறுகிறது. பிரச்சனை நடக்கும் என எதிர்பார்த்த சத்தியா ஏமாற்றம் அடைகிறார்.

உங்க யாருக்காவது மாலை வாங்கணும்னு தோணுச்சா? என் மச்சான் வாங்கிட்டு வந்து இருக்கான் பாருங்க என்று சொல்லி மாலையை வாங்கி மீனா கழுத்தில் போடுவது மட்டுமல்லாமல் மீனா கையில் இன்னொரு மாலையை கொடுத்து தனது கழுத்திலும் போட சொல்கிறார். அதன் பிறகு எங்களுக்காக ஆசையா இவ்வளவு பண்ணியிருக்க வாடா என்று கூப்பிட்டு கேக்க எதிர்த்து வாயில் திணிக்கிறார்.

பிறகு மீனாவின் குடும்பத்தினரும் வீட்டுக்கு கிளம்ப முத்து சத்யாவிடம் நீ இதெல்லாம் உன் அக்கா மேல இருக்கிற பாத்து தல வாங்கிட்டு வரல என்ன வெறுப்பேத்தி பிரச்சனை பண்ணு வாங்கிட்டு வந்தேன் எனக்கு நல்லா தெரியும் எனக்கு உன்ன பார்த்ததும் கோவம் வந்துருச்சு அப்படியே செவில் மேலயே ஒன்னு வைக்கணும்னு தான் தோணுச்சு. அப்படி பண்ணா உன் அக்கா கஷ்டப்படுவா.. என் பொண்டாட்டி கஷ்டப்படுறதை என்னால பார்க்க முடியாது என்று சொல்கிறார். இன்னொரு முறை என்னை வெறுப்பேத்த இந்த மாதிரி ஏதாவது பண்ண கைய மட்டும் இல்ல காலையும் உடைச்சி விட்டுடுவேன் போடா என்று என்று அனுப்பி வைக்கிறார்.

அடுத்ததாக ரோகிணி கிச்சனில் இருக்க விஜயா உள்ளே வர இவங்க என்ன வாங்கி கிழிச்சிட்டாங்கன்னு கொண்டாட்டம் என்று பேசுகிறார். ரோகினி ஃபேமிலியா எல்லாரும் ஒண்ணா இருக்கட்டும். ஜாலியா தானே இருந்தது என்று சொல்ல எங்க ஃபேமிலியா இருந்தும் மீனா வீட்டிலிருந்து வந்திருந்தாங்க ஸ்ருதி வீட்டில் இருந்து வந்து இருந்தாங்க ஆனா உங்க வீட்ல இருந்து தான் யாரும் வர மாட்டாங்க. ஸ்ருதி அம்மா வந்து இருந்தாங்க, மீனாவோட அம்மா வந்து இருந்தாங்க.. உனக்கும் அம்மா இருந்திருந்தால் வந்திருப்பாங்க என்ன பண்றது அவங்க தான் நோய் வந்து போயிட்டாங்களே என்று சொல்ல ரோகிணி கலங்குகிறார்.

விஜயா வெளியே போனதும் அம்மாவிற்கு ஃபோன் போட்டு நலம் விசாரிக்கிறார். இந்த வாரத்துல ஊருக்கு வந்து உன்னையும் கிரிஷ்ஷையும் பாத்துட்டு வரேன் என்று சொல்கிறார். அடுத்ததாக முத்து, மீனா மொட்டை மாடிக்கு தூங்க கிளம்ப அண்ணாமலை இன்னைக்கு நீங்க ரூம்ல படுத்துக்குங்க நாங்க ஹால்ல படுத்துக்குறோம் என்று சொல்ல விஜயா ஏங்க இங்க அனலா இருக்கும் என்று சொல்கிறார். முத்து வேணா அப்பா நாங்க மேலயே படுத்துகிறோம். நீ ரூம்லையே தூங்கி உனக்கு டஸ்ட் ஒத்துக்காது என்று சொல்கிறார்.

பிறகு பாட்டி ரூமில் நான் என்ன நீங்க மட்டும் தான் மேல தூங்கணுமா என்று கேட்க விஜயா வேற என்ன அத்தை பண்றது ரோகிணி வேலைக்கு போறா ஸ்ருதியும் கை நிறைய சம்பாதிக்கிற அவங்க நல்லா தூங்கணும்ல ரூம்ல தான் ஏசி இருக்கு என்று சொல்கிறார். முத்துவும் தான் நாளெல்லாம் கார் ஓட்டறான். மீனாவும் தான் பூ கட்டி விக்கிறா என்று பேச முத்து பாட்டி நல்ல மனசு இருந்தா எங்க படுத்தாலும் தூக்கம் வரும் நீ தானே சொல்லுவ எனக்கு மொட்டை மாடியில் நல்லா தான் தூக்கம் வரும் என்று சொல்கிறார். மீனாவும் ஆமாம் பாட்டி நானும் படித்ததும் தூங்கிடுவேன் என்று சொல்லி இவர்கள் மொட்டை மாடிக்கு வருகின்றனர்.

அதன் பிறகு மீனா கிச்சனில் தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த ஸ்ருதி டென்ட்டை மீனாவிடம் கொடுக்க மீனா எங்களுக்கு எதுக்கு என கேட்கிறார். ஊர்லயும் உங்களுக்கு குடை தேவைப்பட்டது இல்ல அந்த மாதிரி இங்கேயும் தேவைப்படும் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

டெண்ட் உடன் வெக்கப்பட்டு கொண்டு மேலே வந்த மீனாவை பார்த்து என்ன மறைத்து மறைத்து கொண்டு வர, இன்னைக்கு கல்யாண நாள் என்பதால் பால் சொம்பு கொடுத்து அனுப்புறாங்களா என்ன என்று கேட்கிறார். அதுக்குத்தான் ரூம்லயே தூங்க சொன்னாங்களா என்று கேட்க மீனா டென்ட்டை தூக்கி போடுகிறார். பிறகு முத்து டெண்ட் ரெடி பண்ணுகிறார். இருவரும் பாட்டு பாடி ரொமான்டிக்காக திருமண நாளை கொண்டாடுகிறார்கள்.

அதைத்தொடர்ந்து பாட்டி அண்ணாமலை ரூமுக்கு வந்து ரூம் பிரச்சனை பற்றி பேசுகிறார். அண்ணாமலை நானே மொட்டை மாடியில ஒரு ரூம் கட்டலாம்னு இருக்கேன் என்று சொல்ல விஜயா ஸ்ருதியோட அம்மாவே ரூம் கட்டி தரேன்னு சொன்னாங்க என்று பேச அவங்க சொன்னது நல்ல விஷயம் ஆனா சொன்ன விதம் எப்படி இருந்தது? நம்ம வீட்ல அவங்க எதுக்கு ரூமை கட்டிக் கொடுக்கணும் என்று கோபப்படுகிறார். பாட்டியும் விஜயாவை திட்டி விடுகிறார். பிறகு அண்ணாமலை ரூம் கட்ட பணம் வேணும்னா கூட கேளு நான் கொடுக்கிறேன் என்று சொல்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.