Sarkar ரிலீஸ் தேதி

Sarkar ரிலீஸ் தேதி : தளபதி விஜயின் சர்கார் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் திடீரென இன்று காலை நவம்பர் 2-ம் தேதியே படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வைரலாகி இருந்தன.

இதனால் தளபதி ரசிகர்களும் சரியான ரிலீஸ் தேதி தெரியாமல் குழப்பமடைந்து இருந்தனர்.

இந்நிலையில் தற்போது இது குறித்த உண்மை தகவல் வெளியாகியுள்ளது.

அது என்னவென்றால் சர்கார் படம் திட்டமிட்டபடி தீபாவளி ( நவம்பர் 6 ) அன்று தான் வெளியாகும்.

நவம்பர் 2-ம் தேதி வெளியாக இருப்பதாக பரவிய தகவல் உண்மையில்லை என்பது தெரிய வந்துள்ளது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.