கார்த்தி பிறந்தநாளை முன்னிட்டு, இன்று 2 படங்களின் போஸ்டர் வெளியீடு..
கார்த்தி பிறந்த நாளான இன்று வெளியான அவரது படங்களின் அப்டேட்ஸ் பார்ப்போம்..
நடிகர் கார்த்தி இன்று தனது 48-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு, ‘வா வாத்தியார்’ படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. இப்படத்தில் கார்த்தி போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். சூது கவ்வும், காதலும் கடந்து போகும் படங்களின் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்குகிறார்.
கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும், ராஜ்கிரண், சத்யராஜ், ஜி.எம். குமார், ஆனந்த்ராஜ், சில்பா மஞ்சுநாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சத்யராஜ் வில்லனாக நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
90-களில் வெளியான மசாலா படங்களுக்கு ஒரு ட்ரிபியூட் செய்யும் படமாக உருவாகி வருவதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். ‘வா வாத்தியார்’ படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது. படத்தில் கார்த்தி தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராக நடிக்கிறார்.
கார்த்தி நடிக்கும் மற்றொரு படமான சர்தார் 2 படத்தின் சிறப்பு போஸ்டரும் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. ஸ்டைலிஷான லுக்கில் காட்சியளிக்கிறார். இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கி வருகிறார். படத்தில் மாளவிகா மோகனன், ரெஜிஷா விஜயன், ஆஷிகா ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்பட ஷுட் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
