அப்பா சம்மதிக்க வேண்டும்: ஸ்ருதிஹாசன் ஆர்வம்..

ரஜினியுடன் இணைந்து நடித்துள்ள ஸ்ருதிஹாசன், தற்போது தொடர்ந்து தமிழ்ப் படங்களில் கமிட் ஆகி வருகிறார். இது பற்றிய தகவல்கள் காண்போம்..
கமல்ஹாசன் நடித்த ‘உன்னைப்போல் ஒருவன்’ படத்தில் ஸ்ருதிஹாசன் பாடகியாக அறிமுகமானார். பாடகியாக பிரபலமாவார் என எதிர்பார்த்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ஏழாம் அறிவு’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
இதனைத் தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்தார். தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படத்தில் ரஜினியின் மகளாக நடித்துள்ளார். மேலும், மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த்துள்ள ‘ட்ரெய்ன்’ படத்தில் ஹீரோயினாக வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தமிழில் தொடர்ந்து கமிட்டாகி வருவதால் குஷியாகி உள்ளார்.
இந்நிலையில், மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவான ‘தக் லைஃப்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக மும்பையிலிருந்து சென்னைக்கு வந்தார். அப்போது தெரிவிக்கையில், ‘நடிகர் விஜய் அரசியலுக்கு வந்திருப்பதற்கு வாழ்த்துகள்.
கூலி படத்தில் ரஜினிகாந்த்துடன் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவம். அவரிடமிருந்து, நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிந்தது. அப்பாவுடன் சேர்ந்து நடிக்க, நான் தயாராகத்தான் இருக்கிறேன். அதற்கு அவர் சம்மதிக்க வேண்டும்’ என்றார்.
