சர்தார் 2 படத்தின் ரிலீஸ் எப்போது? சூப்பர் தகவல் இதோ..!
சர்தார் 2 படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கார்த்தி.இவரது நடிப்பிலும் பி.எஸ் மித்ரன் இயக்கத்திலும் 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார். இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருப்பார்.
இந்த படத்தில் ராசி கண்ணா, ரஜிஷா விஜயன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்க பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.மேலும் ஜிவி பிரகாஷ் இசையில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.
அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்புகள் நடந்து வரும் நிலையில் வரும் ஜுலை மாதம் திரையரங்குகளில் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.
