சந்தானத்தின் டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தின் டிரைலர் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக பயணத்தை ஆரம்பித்து தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக இடம் பெற்று இருப்பவர் சந்தானம். ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் இவரது நடிப்பில் அடுத்ததாக இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படம் வருகிற ஜூலை 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஒ.எப்.ஆர்.ஒ இசையமைத்திருக்கிறார். இதில் கதாநாயகியாக பிரபல முன்னணி நடிகை சுரபி நடிக்க ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தில்லுக்கு துட்டு திரைப்படத்தின் மற்றும் ஒரு பாகமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் போஸ்டர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் காமெடி, திரில்லர் என கலந்து உருவாகி இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்து வைரலாகி வருகிறது.

YouTube video