Sanjeev About Vijay First Movie
Sanjeev About Vijay First Movie

20 வயதில் தளபதி விஜய்க்கு அந்த விமர்சனத்தால் அவர் ஒரு நாள் முழுவதும் அழுததாக அவரின் நண்பர் தெரிவித்துள்ளார்.

Sanjeev About Vijay First Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனரின் மகனாக திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும் பல்வேறு விமர்சனங்களையும் தடைகளையும் தாண்டி இன்று உச்சம் அடைந்து உள்ளார்.

விஜய் ஹீரோவாக நடித்த முதல் படத்தை பற்றி பத்திரிக்கைகள் கண்ணா பின்னா என விமர்சனங்கள் செய்தனர். இதெல்லாம் ஒரு மூஞ்சி வாயா இதெல்லாம் ஹீரோவா நடிக்க வந்து விட்டேன் என்று பத்திரிகைகள் அவரை விளாசி எடுத்தன. அதிலும் மிகப்பெரிய பத்திரிக்கை ஒன்று அவரை அளவில்லாமல் தாக்கியது.

7 வருசத்துக்கு மாசம் வெறும் 15 ரூபாய் வாடகை செலுத்தி வாழ்ந்த சிவகுமார், அந்த சென்னை வீடு இது தான் – வைரலாகும் புகைப்படம்!

இப்படியான விமர்சனத்தால் தளபதி விஜய் ஒரு நாள் இரவு முழுவதும் கண்ணீர் விட்டு கதறி அழுததாக அவரின் நண்பரும் சீரியல் நடிகருமான சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் விஜய்யை எந்த பத்திரிக்கை மோசமாக விமர்சனம் செய்ததோ அதே பத்திரிக்கை இன்று அவரின் புகைப்படம் தான் அட்டை பக்கத்தில் இருக்க வேண்டும் என்று கேட்கிறது எனவும் பேசியுள்ளார்.