நடிகை சமந்தா பதிவிட்டு இருக்கும் instagram புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஏராளமான டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இரண்டு மொழிகளிலும் எக்கச்சக்கமான ரசிகர்களைக் கொண்டுள்ள இவர் யசோதா திரைப்படத்தின் பிரமோஷன் போது நடந்த நேர்காணலில் தனக்கு மயோசிட்டிஸ் என்னும் நோயின் பாதிப்பு இருப்பதாக தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சி படுத்தினார். அதன் பிறகு அதற்காக தீவிரமான சிகிச்சைகளை மேற்கொண்டு வந்த சமந்தா தற்போது அதிலிருந்து மெல்ல மெல்ல குணமடைந்து வருவதாக கூறி மீண்டும் பழையபடி உத்வேகமாக படப்பிடிப்புகளில் தீவிரம் காட்டி வந்திருந்தார்.

அந்த வகையில் தற்போது குஷி மற்றும் சிட்டாடல் வெப் தொடர் போன்ற படப்பிடிப்புகளை நிறைவு செய்திருக்கும் சமந்தா தற்போது தற்காலிகமாக நடிப்பதில் இருந்து விலகி தனது உடல்நிலை சீராக ஆன்மீகப் பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தியானமே என் வலிமை எனக் குறிப்பிட்டு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சக பக்தர்களுடன் அமர்ந்து தியானம் செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டு இருக்கிறார். அப்புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.