நாளை அமீர்கான் பிறந்த நாள்: ஷாருக்-சல்மான் செம டான்ஸ்; வைரலாகும் நிகழ்வு
பாலிவுட் புகழ் 3 கான்களின் ஆட்டம் தற்போது வைரலாகிறது. இது பற்றிய தகவல் பார்ப்போம்..
பாலிவுட் சினிமாவில் ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் மூவரும் கலெக்ஷன் மேக்கர்கள் என்பது தெரிந்ததே. இந்நிலையில், சல்மான்கான் நடிப்பில் ரமலான் அன்று ‘சிக்கந்தர்’ திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இப்படம் தமிழில் வெளியான சுல்தான், சர்கார் படங்களின் ரீமேக் என கூறப்படுகிறது.
இச்சூழலில், அமீர்கான் நாளை மார்ச் 14-ம் தேதி தனது 60-வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். முன்னதாக பிறந்த நாளை கொண்டாடும் நோக்கில் பெரிய அளவில் தனது வீட்டில் கொண்டாடியுள்ளார்.
இவரது வீட்டில் நடந்த பார்ட்டியில பாலிவுட்டின் கான் நடிகர்களான ஷாருக், சல்மான் விசிட் அடித்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
சல்மான்கான் மற்றும் ஷாருக்கானும் அமீர்கான் வீட்டிற்கு சென்று அவரது பிறந்த நாள் பார்ட்டியில் கலந்துகொண்டு குதூகலமடைந்து உள்ளனர். அதேபோன்று பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோன், ரன்வீர் சிங், கரீனா கபூர், ராணி முகர்ஜி, ஹிருத்திக் ரோஷன், சையிப் அலிகான் ஆகியோர் இந்த பிறந்த நாள் பார்ட்டியில் மகிழ்ந்துள்ளனர். பாலிவுட் திரையுலகமே திரண்டு அமீர்கான் வீட்டிற்கு படையெடுத்தது இதுதான் முதல்முறை.
அமீர்கான், சல்மான் கான், ஷாருக்கான் ஆகிய மூவரும் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்தில் ஆட்டம் போட்டு கலக்கினர். மூன்று கான்களும் பல விழா மேடைகளில் கலந்து கொண்டிருந்தாலும், மூன்று பேரும் சேர்ந்து ஆட்டம் போட்டது பெரிய அளவில் பேசப்பட்டது.
அதேபோன்று நீண்ட இடைவெளிக்கு பிறகு அமீர்கானின் 60-வது பிறந்த நாள் பார்ட்டியில் 3 கான் நடிகர்களும் இணைந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிறந்த நாளுக்கு முன்பே இப்படி ஒரு கொண்டாட்டமா என ரசிகர்கள் உற்சாகமாய் இந்நிகழ்வை வைரலாக்கி வருகின்றனர்.