விஜய்யின் ‘கோட்-2’ உருவாகுமா?: இயக்குனர் வெங்கட் பதில்

விஜய்யின் ‘கோட்’ 2-ம் பாகம் எடுக்க வாய்ப்புள்ளதா என்பது பற்றிய அப்டேட் பார்ப்போம்..

வெங்கட் பிரபு இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான படம் ‘கோட்’ படத்தின் 2-ம் பாகம் உருவாகுமா என்ற ஆர்வத்தில் உள்ளனர் ரசிகர்கள். இப்படத்தில் விஜய் உடன் பிரபுதேவா, பிரசாந்த், சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி உள்பட பலர் நடித்திருந்தனர். யுவன் இசையமைத்திருந்தார்.

ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட இப்படம் தமிழகத்தில் 100 கோடி ஷேர் தொகையாக வசூல் செய்து சாதனை படைத்தது. ‘கோட்’ படத்தின் முடிவில் 2-ம் பாகத்தின் தொடக்கத்தோடு முடித்திருந்தார் வெங்கட்பிரபு. ஆனால், திரையுலகை விட்டு முழுநேர அரசியலுக்கு விஜய் செல்லவுள்ளதால், இப்படம் நடக்குமா என்ற கேள்வி எழுந்து வருகிறது.

இந்நிலையில் ‘GOAT vs OG’ குறித்து வெங்கட்பிரபுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கும் விதமாக “2026-க்கு பின் சொல்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் வெங்கட்பிரபு. 2026-ம் ஆண்டு தேர்தலுக்கு பின் விஜய் என்ன முடிவு எடுப்பார் என்பது தெரியமால் இருக்கிறது. மீண்டும் திரையுலகிற்கு திரும்பினால் ‘கோட் 2’ நடைபெற வாய்ப்பு இருக்கிறது என்பதை தான் சூசகமாக கூறியிருக்கிறார் வெங்கட்பிரபு.

ஆனால், விஜய்யை பொறுத்தவரையில் எடுத்த முடிவிலிருந்து பின் வாங்க மாட்டார் எனவும், அப்படியெல்லாம் இல்லை, மாற்றம் ஒன்றே மாறாதது எனவும் இரண்டு விதமான கருத்துகள் சொல்லப்படுகிறது. எப்படியோ, ‘ஜனநாயகன்’ ரிலீஸ் ஆகட்டும், அப்றம் பார்ப்போம்.!

i will give goat vs og update after 2026 venkatprabhu