ராஷ்மிகாவை விட சம்பளம் அதிகமா? விளக்கம் கொடுத்த மமீதா பைஜூ.!!
ராஷ்மிகாவை விட அதிகம் சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாக இருக்கும் நிலையில் மமிதா பைஜூ விளக்கம் கொடுத்துள்ளார்.

பிரேமலு படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் மமிதாபைஜு அதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டியூட் படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.
இது மட்டுமில்லாமல் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சென்சேஷனல் நடிகையாக தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் மமீதா பைஜூ ராஷ்மிகாவை விட அதிகம் சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகி இருந்தது.
இது குறித்து விளக்கம் கொடுத்த மமிதா பைஜு இதில் எந்த ஒரு உண்மையும் இல்லை என்றும் நான் இவ்வளவு அதிக சம்பளத்தை ஒருபோதும் கேட்கவில்லை என்றும் தயாரிப்பாளருக்கு தன்னுடைய உண்மையான சம்பளம் தெரியும் என்றும் கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

