Sachin Advice For Virat kohli : Sports News, World Cup 2019, Latest Sports News, World Cup Match, India, Sports, Latest News

Sachin Advice For Virat kohli :

இந்திய அணியின் வீரர்கள் தேர்வு எப்பொழுதும் சில சர்ச்சை கொண்டே இருக்கும் என்பதை அனைவரும் அறிந்தது.

அணியில் இவர் இருக்க வேண்டும், இவரை நீக்க வேண்டும் இவரை ஏன் இன்னும் அணியில் வைத்து உள்ளார்கள் என பல பல கேள்விகளும் விமர்சனங்களும் தொடர் முடியும் வரை இந்திய அணி கடந்து செல்ல வேண்டும்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதல் அரையிறுதி ஆட்டம் இன்று மதியம் 3 மணிக்கு மான்செஸ்டர் ஓல்டுடிராபோர்டில் நடக்க உள்ளது.

அதிகாலை நடைப்பயிற்சிக்கும், மாலை நடைப் பயிற்சிக்கும், என்ன வித்தியாசம்? தெரிந்து கொள்வோமா!

இந்த போட்டியில் இந்தியாவின் ஆடும் லெவன் அணியில் இடம் பெற வேண்டிய வீரர்கள் குறித்து சச்சின் தெண்டுல்கர் விராட் கோலிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘ஜடேஜா என்னுடைய முதல் தேர்வு. இதுகுறித்து நான் அணி நிர்வாகத்தில் நிச்சயம் எழுப்புவேன்.

தினேஷ் கார்த்திக் 7-வது இடத்தில் களம் இறக்கப்பட்டால், அவருக்குப் பதிலாக ஜடேஜாவுக்கு கட்டாயம் இடம் கொடுக்க வேண்டும். இடது கை சுழற்பந்து வீச்சு பணியை அவர் பார்த்துக் கொள்வார்.

விளையாடும்போது, இக்கட்டான சூழ்நிலையில் ஈடுகட்டும் நிலையில் மாற்று பந்து வீச்சாளர் தேவை. முகமது ஷமியை மீண்டும் அணிக்கு கொண்டு வர வேண்டும். இதே மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக சிறப்பாக பந்து வீசினார்.

அரை இறுதி போட்டியில் நுழைய இந்திய அணி இன்று வங்க தேச அணியுடன் மோதல் :

ஓல்டுடிராபோர்டில் அவருக்கு சிறந்த அனுபவம் உள்ளது. அணிக்கு மீண்டும் திரும்பி விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். அதனால் ஷமி மீண்டும் அணிக்கு கொண்டு வருவதில் நான் உறுதியாக உள்ளேன்’’ என்றார்.

ஆனால், கோலி சச்சின் தெரிவித்த இந்த ஆலோசனையை ஏற்பாரா என இன்று நடக்க இருக்கும் போட்டியில் தெரிய வரும்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.