Rockstar Anirudh :
Rockstar Anirudh :

Rockstar Anirudh :

வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘அயோக்யா’. இத்திரைப்படத்தில் ராஷி கண்ணா, பார்த்திவன், கே.எஸ்.ரவிக்குமார், சோனியா அகர்வால், ஆர்.ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ளனர்.

‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஷ்ணு ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் மே 10-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் இப்படத்தில் சாம் இசையில் அனிருத் ஒரு பாடலை பாடியிருப்பதாக நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இந்நிலையில் இந்த பாடல் ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸாக இன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே சாம் இசையில் யாஞ்சி யாஞ்சி போன்ற வெற்றி பாடல்களை அனிருத் பாடியுள்ள நிலையில் தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

தெலுங்கில் டெம்பர் எனும் பெயரிலும் இந்தியில் சிம்பா எனும் பெயரிலும் வெற்றி பெற்றn படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் வெளியாகவுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.