Pushpa 2

‘சொர்க்க வாசல்’ படத்தின் கதை யாருடையது?: கோலிவுட்டில் தெறிக்கும் சர்ச்சை..

ஒரு திரைப்படத்தின் வெற்றியை தீர்மானிப்பதில் பட்ஜெட்டை விட, ஸ்கிரிப்ட் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த ஸ்கிரிப்ட் உருவாக செமையான கதைக்கரு அமைய வேண்டும். இப்ப எதுக்கு இந்த விளக்கம்னா ‘சொர்க்கவாசல்’ படத்தின் கதை யாருடையது? என வெடித்த பிரச்சினைதான்.!

அதாவது, நாளை நவம்பர் 29-ம் தேதி ஆர்.ஜே பாலாஜியின் ‘சொர்க்கவாசல்’ திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை சித்தார்த் விஸ்வநாத் இயக்க, ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கி இருக்கிறது.

மிக அருமையான கதைக்களத்தில் ஆர்.ஜே பாலாஜி நேர்த்தியாக நடித்திருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், “நாளைய இயக்குனர்” என்கிற நிகழ்ச்சியின் மூலம் பாராட்டு பெற்ற இயக்குனர் கிருஷ்ணகுமார் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்.

அதாவது, சைதாப்பேட்டை கிளைச் சிறையில் பல கைதிகளிடம் இருந்து, தான் பெற்ற கருத்துகளை கொண்டு ‘கிளைச்சிறை’ என்னும் தலைப்பில் ஒரு கதையாகத் தான் எழுதியதாகவும், அதை ஒரு முழு ஸ்கிரிப்டாக பிரபல ட்ரீம் வாரியர் நிறுவனத்திடம் கொடுத்த பொழுது, சில நாட்கள் கழித்து இப்படம் தங்களுக்கு உகந்ததாக இல்லை என்று மெயில் மூலம் தனக்கு ரிப்ளை வந்ததாக கூறியிருக்கிறார் கிருஷ்ணகுமார்.

மேலும், பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு, தற்போது ட்ரீம் வாரியர் நிறுவனம் மற்றும் ஆர்.ஜே பாலாஜி மீது குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சூழலில், சில மாதங்களுக்கு முன்பாக பிரபல நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிக் கொண்டிருந்த ஆர்.ஜே பாலாஜி

‘மூக்குத்தி அம்மன் திரைப்படம் பிரபல ஹிந்தி திரைப்படத்தின் காபி தான். சில மாற்றங்களை செய்து தான், அந்த திரைப்படத்தை நான் எடுத்தேன்’ என வெளிப்படையாகவே அவர் கூறிய வீடியோவை, இப்பொழுது இணையவாசிகள் வைரல் ஆக்கி வருகின்றனர்.

அவ்வகையில், ‘சொர்க்கவாசல்’ திரைப்படமும் அப்படி காப்பியடிக்கப்பட்ட கதையா? என்ற கேள்வியை முன் வைத்து வருகின்றனர்.

இதற்கு, ஆர்.ஜே. பாலாஜி ‘சொர்க்கவாசல் படத்தின் கதை எனக்குரியது’ என கூற சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இது குறித்து ஆய்வு செய்து தீர்மானிப்பது யாரோ? எனவும் இணையவாசிகள் கேள்வி கேட்பதும் வைரலாகி வருகிறது.

இயக்குனர் கிருஷ்ணகுமார் பரபரப்பு குற்றச்சாட்
இயக்குனர் கிருஷ்ணகுமார் பரபரப்பு குற்றச்சாட்