பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Release Date of Beast Teaser : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன் உட்பட எக்கச்சக்கமான திரையுலகப் பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

ஏற்கனவே இந்தப் படத்தில் இருந்து வெளியான அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த டீசரை ஏப்ரல் ஒன்றாம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இதை அறிந்த ரசிகர்கள் ஒரு பக்கம் உற்சாகமடைந்து இருந்தாலும் இன்னொரு பக்கம் ஏப்ரல் ஃபூல் செய்ய நெல்சன் திட்டம் போடுகிறாரா? அவரு குசும்புக்கார ஆளாச்சே எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.