மொத்த கதையையும் மாற்றி பீஸ்ட் படத்தை எடுத்தது விஜய் தான் என சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

Reasons for Beast Negative Reviews : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

நெல்சன் இயக்கும் படம் என்பதால் டார்க் காமெடி திரைப்படமாக இருக்கும் விஜய்யை நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு காமெடி ஹீரோவாக பார்க்கலாம் என எதிர்பார்த்தவர்களுக்கு பீஸ்ட் முழுக்க முழுக்க ஏமாற்றத்தை கொடுத்தது. இதனால் விஜய் ரசிகர்கள் உட்பட பலரும் பீஸ்ட் படத்தை குறை கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் நெல்சன் திலீப் குமார் பெரிய ஹீரோக்களை வைத்து நாம் நினைத்தபடி படமெடுக்க முடிவதில்லை என கூறிய பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தபடத்தின் கதையையும் நெல்சன் குடும்ப காமெடி படமாக விஜய்யின் சொல்ல அவர் ஆக்சன் காமெடி படமாக இருக்கட்டும் ஒரு கதையில் சில மாற்றங்களை செய்ததாக சொல்லப்படுகிறது.

கடைசியில் ஆக்ஷன், காமெடி என எதுவும் ஒர்க்அவுட் ஆகாமல் சறுக்கத்தை சிந்திக்க விஜய்தான் காரணம் எனவும் அதன் காரணமாகவே அவர் நெல்சன் திலீப் குமாருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தர முடிவு செய்திருப்பதாக தகவல் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.