Vivek Death

விவேகம் திடீர் மறைவுக்கு என்ன காரணம்? நம்மை சிரிக்க வைத்தவர் மனதில் மறைத்து வைத்திருந்த சோகங்கள் குறித்து பார்க்கலாம்.

Reason Behind Vivekh Death : முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். சமூகத்துக்கு தேவையான நல்ல கருத்துக்களை காமெடியாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த பெருமை இவருக்கு உண்டு.

சமூகத்தின் மீது தீராத காதல் கொண்டவர். பசுமை இந்தியாவாக மாற்ற வேண்டும் என அப்துல் கலாமின் ஆசையை நிறைவேற்ற அயராது போராடியவர். தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டவர். பல்வேறு விருதுகளை வாங்கி பெருமை சேர்த்தவர்.

இப்படி விவேக்கின் சாதனைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். நம்மை அனைவரையும் அனைத்து துயரங்களையும் மறந்து சிரிக்க வைத்தவர். ஆனால் இன்று அவர் நம்மோடு இல்லை.

நேற்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதயத்தின் இடதுபுறம் வால்வில் முழுவதுமாக அடைத்து இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மருத்துவர் பலனின்றி இன்று காலை 4.35 மணிக்கு மரணம் அடைந்தார்.

இவருடைய மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நம்மை அனைவரையும் சிரிக்க வைத்த விவேக்கின் இந்த திடீர் மரணத்திற்கு காரணம் அவருக்குள் இருந்த சோகம் என கூறப்படுகிறது.

தனக்கென இருந்த ஒரே மகனையும் பறிகொடுத்த விவேக் அந்த மீளமுடியாத துயரில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்துள்ளார். அனைத்து சோகங்களையும் தனக்குள் புதைத்துக்கொண்டு மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காக தன் முகத்தில் சிரிப்பை மட்டுமே வெளிக்காட்டியுள்ளார்.

இவருக்குள் புதைத்து வைக்கப்பட்ட சோகங்களே அவருடைய மரணத்திற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. விவேக்கின் மறைவு நம்மில் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.