இமயமலைக்கு சென்று செட்டிலாகி விடுவேன்: நடிகர் ரவிமோகன் பேச்சு..

‘இரவுக்கு பின்னே பகல், பிரிவுக்கு பின்னே உறவு’ இந்த வாழ்க்கையே ஒரு வட்டம் தான் சார்.! அதாவது ரவிமோகன் சார் விஷயத்திற்கு வருவோம்..
ரவிமோகன் தனது மனைவி ஆர்த்தி உடனான கருத்து வேறுபாடு காரணமாகவும் ஜெயம் ரவி என்ற பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டார்.
மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிக்கை வாயிலாக தெரிவித்த ரவிமோகன் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்திருக்கிறார். இதையடுத்து, இருவரும் சமரச பேச்சுவார்த்தை நடத்த குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருவருக்கும் இடையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு பிப்ரவரி 15-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த ‘பிரதர்’ படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் போதுமான வரவேற்பு பெறவில்லை.
இதனைத் தொடர்ந்து, ‘காதலிக்க நேரமில்லை’ படம் வெளியானது. ஆனால், இந்தப் படமும் வசூலில் பெரியளவில் குவிக்கவில்லை. தொடர்ந்து ஜெயம் ரவி 34, எஸ்கே 25, ஜெனி மற்றும் தனி ஒருவன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடன இயக்குநர் கலா மாஸ்டருடன் நடந்த நேர்காணலில், ‘சினிமாவை விட்டுவிட்டு எங்க போவீங்க? ஏற்கனவே விஜய் அரசியலுக்கு சென்று விட்டார். அஜித்தும் கார் ரேஸூக்கு சென்றுவிட்டார்’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இதற்கு பதிலளித்த ரவிமோகன் கூலாக, ‘எனக்கென்று எந்த ஆசையும் இல்லை. நான் இமயமலைக்கு சென்று செட்டிலாகி விடுவேன்’ என பேசியிருக்கிறார். இதற்கு அவரோட விவாகரத்து மற்றும் படங்களின் தோல்வி காரணமாக சொல்லப்படுகிறது.
இதற்கு இணையவாசிகள், ‘ஒரு படம் தோல்வி அடைந்தால், ஒரு படம் ஹிட் கொடுக்கும். அதற்காக இப்படியெல்லாம் முடிவு எடுக்கக்கூடாது, தேய்பிறை போனால், வளர்பிறை வரும் தானே.!’ என நம்பிக்கை விதைத்து வருகின்றனர்.