ரவி மோகனுக்கு ‘தேவி ரத்னா’ விருது

Web Ads

‘உத்சவ் 2026’ விழாவில் நடிகர் ரவி மோகனுக்கு ‘தேவி ரத்னா’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. பாலக்காட்டில் உள்ள பல்லாஸனா பழையகாவு ஸ்ரீ மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட விழாவில், கலை, கலாச்சாரம், ஆன்மிகம் மற்றும் சினிமா ஒன்றிணைந்த கொண்டாட்டம் ரசிகர்களை கவர்ந்தது.

‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட படங்களில் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்பு மற்றும் தமிழ் சினிமாவிற்கான பங்களிப்பை முன்னிட்டு ரவி மோகன் இந்த உயரிய விருதிற்கு தேர்வு செய்யப்பட்டார். விருதுடன் ₹1,00,001 பணப் பரிசு, தங்கச் சின்னம், பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பலகையும் வழங்கப்பட்டது.

விழாவில் பேசிய ரவி மோகன், கோவிலின் ஆன்மிக சூழல் மற்றும் தேவஸ்தானத்தின் பாரம்பரிய பெருமைக்கு நன்றி தெரிவித்தார். அவரது உரைக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

மேலும், பாடகி கெனீஷாவின் அதிரடி இசை நிகழ்ச்சி விழாவை கொண்டாட்டமயமாக மாற்றியது. தனது இசைக்குழுவுடன் மேடையேறிய அவர், மெலடி மற்றும் உற்சாகமான பாடல்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

ஆன்மிகம், இசை, சினிமா மற்றும் பாரம்பரியம் இணைந்த ‘உத்சவ் 2026’ விழா, சமீப காலத்தின் நினைவுகூரத்தக்க நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்துள்ளது.