Pushpa 2

12,000 திரையரங்குகளில் புஷ்பா-2 ரிலீஸ்: ராஷ்மிகா செம குஷி

விளம்பரப் படங்களில் நடித்து, பின்னர் சினிமா வாய்ப்பு தேடி தமிழில் ‘பேட்ட’ படத்தில் அறிமுகமாகி தற்போது 10 கோடி ரூபாய் சம்பளமாக வாங்குகிறாரா ராஷ்மிகா? இது குறித்து அவர் சொல்லும் பதில் என்ன பார்ப்போம்..

புஷ்பா’ படத்தில் ‘ஊ சொல்றியா’ என்ற பாடலுக்கு சமந்தா நடனமாடியிருந்த நிலையில், புஷ்பா -2 படத்தில் நடிகை ஸ்ரீலீலா நடனமாடியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி, மலையாளம் மொழிகளில் வெளியான நிலையில், அல்லு அர்ஜுன் மற்றும் பகத் பாசிலுக்கு இடையேயான வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. இப்படம் வருகிற 5-ம் தேதி வெளியாக உள்ளது.

உலகளவில் சுமார் 12 ஆயிரம் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் நாட்டில் மட்டுமே 800 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான சூர்யாவின் ‘கங்குவா’ படம் 11 ஆயிரம் திரையரங்குகளில் வெளியானது. அதைவிட கூடுதலாக ‘புஷ்பா 2’ படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில், படத்தின் முதல் பாகத்துக்கு ரூ.2 கோடி சம்பளம் வாங்கிய ராஷ்மிகா, 2-ம் பாகத்துக்கு ரூ.10 கோடி வாங்கியதாகவும் தகவல் பரவி வருகிறது. இதுபற்றி ரஷ்மிகா,

‘எனது சம்பளம் பற்றி வரும் தகவல்களில் உண்மையில்லை. அது வதந்திதான். படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் இயக்குநர் சுகுமார் இருப்பதால், புரமோஷன்களில் அவர் கலந்து கொள்ளவில்லை. ‘புஷ்பா’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது கிடைத்தது. அது போல, இந்தப் படத்தில் எனக்கு கிடைக்கும் என் நம்புகிறேன்’ என்றார்.

தமிழ்நாட்டில் இன்று ‘புஷ்பா 2’ படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.