Pushpa 2

‘குரூப்புல டூப்பு’ என நெட்டிசன்கள் விமர்சனம்: ‘எக்ஸ்’ தளத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகல்

நெட்டிசன்களின் கடும் விமர்சனங்களால் டென்ஷனாகி ‘எக்ஸ்’ தளத்திலிருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல்கள் பார்ப்போம்..

‘தல’ அஜித்தின் ஏகே-62 திரைப்படத்தை இயக்க கமிட்டாகி, கதை பிடிக்காததால் கட் ஆனார் விக்னேஷ் சிவன்.

அஜித் பட வாய்ப்பு கை நழுவி போனதால், சிவகார்த்திகேயனை வைத்து இயக்குவதாக இருந்து, அதுவும் கைவிடப்பட்ட (எல்.ஐ.கே.) கதையை மீண்டும் பாலீஸ் செய்து, பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக நடிக்க வைத்து, படமாக்கி இருக்கிறார்.

செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள எல்.ஐ.கே. படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வருகிறது.

பொதுவாக, விக்னேஷ் சிவன் ‘எக்ஸ்’ தளம் மற்றும் இன்ஸ்டாவில் ரொம்ப ஆக்டிவாக இருப்பவர். அதனால், எக்ஸ் தளத்தில் 19 லட்சம் பாலோவர்களும், இன்ஸ்டாவில் 40 லட்சம் பாலோவர்களும் உள்ளனர்.

இந்நிலையில், இன்று திடீரென தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தை டெலிட் செய்து அதிலிருந்து வெளியேறி இருக்கிறார் விக்னேஷ் சிவன். அதற்கான காரணத்தை அவர் வெளியிடவில்லை.

விக்னேஷ் சிவன் தன் எக்ஸ் தள கணக்கை டெலிட் செய்ததற்கு, அதில் அவருக்கு அதிகளவில் எதிர்ப்பு கிளம்பியதே காரணம் என கூறப்படுகிறது.

அண்மையில், தனுஷுடனான பிரச்சினை மட்டுமின்றி, சமீபத்தில் பிரபல விமர்சகரான பரத்வாஜ் ரங்கன் ‘பான் இந்தியா’ இயக்குனர்களை வைத்து ரவுண்டு டேபிள் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி இருந்தார். அதில் விக்னேஷ் சிவனும் கலந்துகொண்டார்.

பாலிவுட்டில் இருந்து கபீர் கான், மலையாளத்தில் இருந்து லிஜோ ஜோசப் பெலிசேரி மற்றும் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குனர் சிதம்பரம், தெலுங்கில் இருந்து வெங்கி அட்லூரி, தமிழில் இருந்து விக்னேஷ் சிவன் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி கலந்துகொண்டனர்.

பான் இந்தியா இயக்குனர்களுக்கான நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன் ஏன் கலந்துகொண்டார்? என கேள்வி எழுப்பிய நெட்டிசன்கள் அவரை ‘குரூப்புல டூப்பு’ என்றெல்லாம் விமர்சித்து வந்தனர். இதனால் டென்ஷன் ஆகி அவர் ‘எக்ஸ்’ தளத்தை விட்டு விலகி இருக்கலாம் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.