Web Ads

ரூ.150 கோடி பட்ஜெட்டில் அட்லி இயக்கிய விளம்பரப் படம், வைரல்

இயக்குநர் அட்லி, ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’மூலம் இந்திக்குச் சென்றார். அந்தப் படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இதையடுத்து அவர், அல்லு அர்ஜுன் நடிக்கும் சயின்ஸ் பிக் ஷன் படத்தை இயக்கி வருகிறார். இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில், தீபிகா படுகோன் நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இப்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ‘சிங் தேசி சைனிஸ்’ என்ற சீன உணவுப்பொருள் நிறுவனத்தின் விளம்பரம் படம் ஒன்றை அட்லி இயக்கி வருகிறார். இதன் டீஸர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த விளம்பரத்தில், சிங் நிறுவன ஏஜென்டாக இந்தி நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலாவும் வில்லனாக பாபி தியோலும் நடித்துள்ளனர். இதை ரூ.150 கோடி பட்ஜெட்டில் அட்லி உருவாக்கியுள்ளார்.

இந்தியாவிலேயே காஸ்ட்லியான விளம்பரமாக இது உருவாகிறது. இதற்காகப் பிரமிக்க வைக்கும் விஷுவல் எஃபெக்ட்ஸ், கிராபிக்ஸ் இருக்கும் என தெரிகிறது. இந்த விளம்பரம் ஒரு மெகா பட்ஜெட் படத்தின் டிரெய்லர் போல இருப்பதாக சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தின் பட்ஜெட்டைவிட இந்த விளம்பரத்தின் பட்ஜெட் அதிகம் என்றும் கூறி வருகின்றனர்.

ranveer singh sreeleela bobby deol turn agents in ad by atlee