தளபதி விஜயின் வாரிசு திரைப்படத்தின் ரஞ்சிதமே பாடல் 70 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கத்தில் உருவாகும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்து வரும் இப்படம் அடுத்த ஆண்டு வரும் பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது.

தமன் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் அண்மையில் வெளியாகி இணையதளத்தில் சூப்பர் ஹிட் அடித்து வரும் நிலையில் தற்போது இப்பாடல் இணையதளத்தில் 70 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதனை படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இதனை வைரலாக்கி வருகின்றனர்.