விறுவிறுப்பான கதைக்களத்துடன் த்ரிஷா நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ராங்கி.

படத்தின் கதைக்களம் :

துணிச்சல் மிக்க பத்திரிக்கையாளரான திரிஷா கிசுகிசு எழுதுவது மட்டுமல்லாமல் சமூகம் சார்ந்த பிரச்சினைகளை தைரியமாக பத்திரிக்கையில் எழுதி வருகிறார். இப்படி அந்த நிலையில் தீவிரவாதி ஒருவர் பெண் ஒருவருடன் சாட் செய்கிறார். அந்தப் பெண் டிபி புகைப்படமாக வைத்திருப்பது திரிஷாவின் அண்ணன் மகள் போட்டோ.

இந்த விஷயம் திரிஷாவுக்கு தெரிய வர அதன் பிறகு அவரும் அந்த தீவிரவாதியுடன் சாட் செய்ய அவன் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. அப்போது அதன் அமைச்சர் ஒருவர் வெளிநாடு சென்ற போது எண்ணெய் டீல் பேசிய புகைப்படத்தை அந்த தீவிரவாதி திரிஷாவுக்கு அனுப்ப அதை வைத்து பிரேக்கிங் நியூஸ் உருவாக்குகிறார்.

இதனை அடுத்து அந்த அமைச்சரும் கொல்லப்பட திரிஷா மற்றும் அவரது அண்ணன் மகளை அழைத்துக் கொண்டு போலீஸ் தீவிரவாத கும்பலை பிடிக்க வெளிநாடு செல்கிறது. அதன் பிறகு என்ன நடந்தது? திரிஷா இந்த பிரச்சனைகளிலிருந்து எப்படி வெளி வருகிறார்? என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.

படத்தைப் பற்றிய அலசல் : துணிச்சல் மிக்க பத்திரிக்கையாளராக படத்தில் எதார்த்தமான நடிப்பை கொடுத்து கவனம் பெறுகிறார் திரிஷா.

சத்யாவின் பின்னணி இசை மற்றும் கே ஏ சக்திவேலின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுக்கிறது.

ஆலிம் அழகான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

இயக்குனர் சரவணன் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் படத்தை நேர்த்தியாக கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் சரவணன்.

தம்ப்ஸ் அப் :

1. த்ரிஷாவின் நடிப்பு

2. சரவணனின் இயக்கம்

3. பரபரப்பான காட்சிகள்

தம்ப்ஸ் டவுன் :

வழக்கமான லாஜிக்கல் தவறுகள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.