ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சூர்யா?

இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனின் அடுத்த பட ஹீரோ யார் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்..

ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும், வெங்கி அட்லூரி இயக்கும் படம் மற்றும் ஆவேஷம் பட இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் ஒரு படம் என சூர்யா நடித்து வருகின்றார்.

இதைத்தொடர்ந்து தற்போது தேசிய விருது வென்ற ஒரு இயக்குநரிடம் சூர்யா கதை கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணனிடம் சூர்யா கதை கேட்டிருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக, ரஜினியிடம் கதை சொல்லி கிட்டத்தட்ட ‘தலைவர்-173’ பட வாய்ப்பை பெறவிருந்தார் ராம்குமார் பாலகிருஷ்ணன். ஆனால், அந்த வாய்ப்பும் அவருக்கு கிடைக்கவில்லை. அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயனிடம் ஒரு கதை சொன்னதாக தகவல் வந்தது.

சிம்பு, ரஜினி, சிவகார்த்திகேயன் தற்போது சூர்யா என ராம்குமார் பாலகிருஷ்ணனின் அடுத்த பட ஹீரோ பற்றி பல தகவல்கள் வருகின்றன. ‘பார்க்கிங்’ போல தரமான தேசிய விருது பெற்ற படத்தை கொடுத்த ராம்குமார், விரைவில் தனது அடுத்த பட படப்பிடிப்பை துவங்கவேண்டும் என்பதே ரசிகர்களின் ஆர்வமாக உள்ளது.

ramkumar balakrishnan directed movie hero suriya
ramkumar balakrishnan directed movie hero suriya