ரஜினிக்கு எதிராக விஜய் ரசிகர்கள் ஒட்டி இருக்கும் போஸ்டர் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் இவரது நடிப்பில் அடுத்ததாக ஜெயிலர் திரைப்படம் வெளியாக உள்ளது. தொடர்ந்து சமீப காலமாக சூப்பர்ஸ்டார் பட்டம் குறித்து ரஜினி ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே மோதல் போய்க்கொண்டு இருக்கிறது. அதற்கேற்றார் போல் ஜெயிலர் இசை வெளியிட்டு விழாவில் காக்கா- கழுகு என ரஜினி கூறிய கதை ரசிகர்கள் மத்தியில் கோபத்தை அதிகரிக்க செய்துள்ளது.

இந்நிலையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் ரஜினியை தாக்கும் படி “என்னுடைய உச்சம் உனக்கு ஏன் அச்சம்” என குறிப்பிட்டு போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். அதன் பிறகு விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரை ரஜினியின் ரசிகர்கள் கிளி தெரிந்துள்ளனர். தற்போது அப்போஸ்டரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.