வீட்டின் முன் திரண்ட ரசிகர்களுக்கு, ரஜினி உற்சாகமாய் புத்தாண்டு வாழ்த்து..
மலர்ந்த 2025-ம் ஆண்டில் ரஜினிகாந்த், நடிப்பில் இரண்டு படங்கள், அதாவது கூலி மற்றும் ஜெயிலர் 2 படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த ஆண்டு இரண்டு படங்களை ரிலீஸ் செய்ய முடிவெடுத்ததே, சூப்பர் ஸ்டார்தான் என கூறப்படுகின்றது. அதிலும் குறிப்பாக, சூப்பர் ஸ்டார், தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் ஆவதால், இந்த முடிவினை அவர் எடுத்ததாக ஒரு பேச்சு உள்ளது.
தற்போது, ரஜினி ‘கூலி’ படப்பணியில் நடித்து வருகின்றார். இந்தப் படத்தில் தேவா என்ற கதாபாத்திரத்தில் வருகின்றார். படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டிவிட்டது.
கடந்த ஆண்டு தனது பிறந்த நாளில் கூட, கூலி படப்பிடிப்புத் தளத்தில் இருந்தார்.
வழக்கமாக சூப்பர் ஸ்டார் பிறந்த நாளில் அவருக்கு வாழ்த்து சொல்ல, அவரது ரசிகர்கள் அவரது வீட்டின் முன் திரள்வது வழக்கம். ஆனால், இந்தமுறை ரசிகர்களை வரவேண்டாம் எனக் கூறியும், ரசிகர்கள் வீட்டின் முன் திரண்டு நின்றார்கள்.
எனவே, புத்தாண்டில் ரசிகர்களுக்கு ஏமாற்றம் கொடுக்கக் கூடாது என ரஜினிகாந்த், ரசிகர்களைக் காண வீட்டில் இருந்து வெளியே வந்து கை அசைத்தார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.