Pushpa 2

‘விடாமுயற்சி’ படம் தந்த விடாஅயற்சி: அஜித் ரசிகர்கள் அப்செட்

‘புத்தாண்டுக்கு இப்படியொரு அறிவிப்பு வெளியிடுவது சரியல்ல’ என ஏகே ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ள நிகழ்வு குறித்துப் பார்ப்போம்..

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘விடாமுயற்சி’ படத்துக்காக நீண்ட காலமாகவே ரசிகர்கள் காத்திருப்பில் இருக்கின்றனர். இப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே தள்ளிப்போவது தொடர்வதால், எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், ‘விடாமுயற்சி’ படம் அஜர்பைஜான் நாட்டில் ஷுட்டிங் துவங்கி நடந்து வந்தது. நீண்ட காலமாக பட வேலைகள் நடந்து வந்த நிலையில், அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. இதனால், ரசிகர்கள் அப்செட்டில் இருந்தனர்.

இச்சூழலில், ஒரு வழியாக இப்படத்தின் ஷுட்டிங் முழுவதுமாக நிறைவடைந்து பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இதனால், ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்தனர். சமீபத்தில் ‘சவதீகா’ என்ற பாடல் வெளியாகி இணையத்தில் வேற லெவலில் வைரலானது.

இதனையடுத்து ‘விடாமுயற்சி’ டிரெய்லர் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர். இந்நிலையில், நேற்றிரவு திடீரென ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக செய்தி ஒன்றை லைகா நிறுவனம் வெளியிட்டது.

அதன்படி ‘விடாமுயற்சி’ பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாது என்றும், சில தவிர்க்க இயலாத காரணங்களால் வெளியீடு தள்ளி வைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனால் ஏகே ரசிகர்கள் மீண்டும் அடைந்துள்ளனர்.

புத்தாண்டு அன்னைக்கு இப்படி ஒரு அறிவிப்பு வெளியிடனுமா? இதை மறுநாள் அறிவித்திருக்கலாம் என்றெல்லாம் அதிருப்தியில் இணையத்தில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

ajith kumar fans upset over vidaamuyarchi movie release
ajith kumar fans upset over vidaamuyarchi movie release