ஜெயிலர்-2 முடிந்து, ரஜினியின் அடுத்த பட இயக்குனர் யார்?
ஜெயிலர்-2 படத்தின் ஷுட்டிங் அப்டேட்ஸ் பார்ப்போம்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து லோகேஷ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் வருகிற ஆகஸ்ட் 14-ந்தேதி வெளியாகிறது. அவ்வகையில் ‘கூலி’ படப்பிடிப்பை முடித்த சூப்பர் ஸ்டார் தற்போது ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
கோவை மற்றும் கேரளாவின் எல்லை பகுதியில் நடந்து வந்த இப்படப்பிடிப்பு, தற்போது கேரளாவின் கோழிக்கோட்டில் தொடங்கி இருக்கிறது. இதற்காக, ரஜினி அங்கு சென்றிருக்கிறார். தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்து இப்படப்பிடிப்பில் ரஜினி ஈடுபட உள்ளார். 20 நாட்கள் இப்படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், அங்கு சென்ற ரஜினியை ‘ஹுக்கும்’ பாட்டு போட்டு படக்குழுவினர் வரவேற்றுள்ளனர். அது குறித்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
கோழிக்கோட்டின் செருவனூரில் உள்ள சுதர்சன் பங்களாவில் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. இச்சூழலில் ரஜினியின் அடுத்த பட இயக்குனர் அவரது பிறந்த நாளில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் நடிப்பில் ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அந்நிலையில், எச்.வினோத் சொல்லும் கதை ரஜினிக்கு பிடிக்கிறதா? எனவும் பார்ப்போம்.
