என்னை பத்தி வெச்சுக்காத வதந்தி, எரிஞ்சு சாம்பலாயிடுவ: சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர்-2 டீசர் ‘டூப்பா?’ பதிலடி..
சூப்பர் ஸ்டார் ரஜினி வாய்ஸ்ல சொல்லணும்னா ‘இது நெருப்புடா, என்னை பத்தி எங்கேயும் வெச்சுக்காத வதந்தி.. எரிஞ்சு சாம்பலாயிடுவ’. அதாவது விஷயத்திற்கு வருவோம்..
ரஜினியின் ‘ஜெயிலர்’ பட மாஸான வெற்றிக்குப் பின்னர், ஜெயிலர் 2 குறித்து ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்தது. எனவே படக்குழுவும் ‘ஜெயிலர்’ படத்தின் 2-ம் பாகத்தை உருவாக்க முடிவு செய்தார்கள்.
தற்போது ரஜினி ‘கூலி’ படத்தில் நடித்து வருகின்றார். படம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸாகும் என கூறப்படுகின்றது.
இதற்கிடையில், கடந்த ஆண்டில் சூப்பர் ஸ்டாரின் 74-வது பிறந்த நாளில் ஜெயிலர் 2 குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாட்டுப்பொங்கல் அன்று ப்ரோமோ வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும், குறுகிய நேரத்தில் அதிக பார்வைகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், ப்ரோமோவில் நடித்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இல்லை, அவருக்கு பதிலாக வேறு யாரையோ டூப் போடச் சொல்லி, ப்ரோமோவை எடுத்துள்ளனர் என சில விமர்சகர்கள் விமர்சித்தனர்.
தற்போது அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ப்ரோமோ மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர். எப்பூடி.. குறி வெச்சா இரை விழணும்ல..!
