
பிக் பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னர் யார்? ஓட்டிங் நிலவரம் இதோ..!
பிக் பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. பைனல் வரை வருவார் என்ற எதிர்பார்ப்புடன் இருந்த ஜாக்லின் எதிர்பாராத விதமாக பணப்பெட்டி தோற்று மிட் வீக் எவிக்சன் செய்யப்பட்டார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
தற்போது ஓட்டின் நிலவரம் படி டைட்டில் வெல்ல அதிக வாய்ப்பு முத்துக்குமரனுக்கு இருக்கிறது. முதலிடத்தில் முத்துக்குமரனும் இரண்டாவது இடத்தில் சௌந்தர்யாவும், மூன்றாவது இடத்தில் விஷால், நான்காவது இடத்தில் ரயான், ஐந்தாவது இடத்தில் பவித்ரா இருக்கின்றனர்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
