சூப்பர் ஸ்டாரின் 50 ஆண்டு திரைப் பயணம்: விரைவில் கூலி; ரசிகர்கள் குஷி

சூப்பர் ஸ்டாரின் ‘கூலி’ பட ரிலீஸ் குறித்து பார்ப்போம்..

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தின் மொத்த ஷூட்டிங்கும் முடிவடைந்து விட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக வீடியோ வெளியிட்டு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும், இதற்காக வெளியிடப்பட்ட வீடியோவில், லோகேஷ் கனகராஜ் ‘ஆக்‌ஷன்’ சொல்லும்போது, “ஆக்‌ஷன் சார்” என கூறுகிறார். அதை உன்னிப்பாக கவனிக்கிறார் ரஜினிகாந்த். இந்நிகழ்வை கண்ட ரசிகர்கள் லோகேஷ் கனகராஜை பாராட்டி வருகிறார்கள்.

படம் ஆக்‌ஷன் ஜானர் என்பதால், சண்டைக் காட்சிகள் அனல் பறக்கும், அதில் குறையேதும் இல்லை என எதிர்பார்க்கலாம். அனிருத் இசையில், ஒரே பாடலுக்கு பூஜா ஹெக்டே போடும் குத்தாட்டம் ‘காவாலா’ பாடலை விட வசீகரிக்கும் என கூறப்படுகிறது. படத்தை வரும் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

ரஜினிகாந்த், செம எனர்ஜியாக தற்போது ஜெயிலர்-2 ஷூட்டிங்கில் ஈடுபட்டு வருகிறார். சூப்பர் ஸ்டார் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் ஆவதால், ‘கூலி’ படத்தை கொண்டாட அவரது ரசிகர்கள் வேற லெவலில் தயாராகி வருகிறார்கள்.