லால் சலாம் படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை காண ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத மாபெரும் உச்ச நட்சத்திரமாக கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இதன் படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்துள்ள நடிகர் ரஜினிகாந்த் இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு கௌரவ வேடத்தில் நடித்து வருகிறார். இது தொடர்பான போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி வைரலானதை தொடர்ந்து சமீபத்தில் பாண்டிச்சேரியில் நடைபெற்ற லால் சலாம் படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பயங்கரமாக வைரலானது.

அந்த வகையில் தற்போது லால் சலாம் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ள திருவண்ணாமலைக்கு வருகை தந்துள்ள நடிகை ரஜினியை காண நல்லிரவில் ரசிகர்கள் குவிந்துள்ளனர். அவர்களுக்கு காரில் அமர்ந்தபடி கையசைத்து உற்சாகப்படுத்தி செல்லும் ரஜினியின் வீடியோ தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/Maravarman8/status/1670894615103442946?t=PiYL4W-jqdlWwY2hNUYMPg&s=19