Web Ads

ராஜமவுலி சர்ச்சைப் பேச்சு; விளக்கம் தருவாரோ?

Web Ad 2

பாகுபலி, ஆர்​ஆர்​ஆர் படங்களின் மாபெரும் வெற்​றிக்​குப் பிறகு, மகேஷ்​பாபு நடிக்​கும் ‘வாரணாசி’ என்ற படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. மகேஷ்பாபு​வின் கேரக்டரை ஹனுமனை நினை​வூட்​டும் வகையில் வடிவமைத்துள்​ள​தாக ராஜமவுலி​யின் தந்தை விஜயேந்​திர பிர​சாத் கூறி​யிருந்​தார்.

இதற்​கிடையே பிரியங்கா சோப்ரா ‘மந்தாகினி’ என்ற கதாபாத்​திரத்​தி​லும் பிருத்​வி ராஜ் ‘கும்பா’ என்ற கதாபாத்திரத்திலும் நடிக்​கின்​றனர். அவர்​களின் முதல் தோற்ற போஸ்​டர் வெளி​யிடப்​பட்ட நிலையில் படத்​தில் டைட்​டில் டீஸர், ஹைதரா​பாத்தில் நடந்த ‘குளோப் ட்ராட்​டர்’ நிகழ்​வில் வெளியிடப்பட்​டது.

படத்தில் மகேஷ்​பாபு, ருத்ரா என்ற கதா​பாத்திரத்​தில் நடிக்கிறார். பிரம்மாண்ட​மான விஎஃப்எக்ஸ் காட்​சிகளு​டன் உரு​வாக்​கப்​பட்​டுள்ள இந்த டீஸர் இணை​யத்​தில் வரவேற்​பைப் பெற்​றுள்​ளது. இதன் கதை ராமாயணக் காலத்​தில் தொடங்கி இன்​றைய நவீன காலத்​துடன் இணைத்து உரு​வாக்​கப்​பட்​டுள்​ள​தால் படத்​துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்​கிடையே ராஜமவுலி​யின் தந்​தை​யும், திரைக்​கதை ஆசிரியரு​மான விஜயேந்​திர பிர​சாத், ‘இந்தப்படம் ஒரு தெய்வீக முடிவு, ராஜமவுலி​யின் இதயத்​தில் இருந்து ஹனு​மன் இப்​படத்தை இயக்கு​வதற்கு வழி நடத்துகிறார், இந்​தப் படம் ஹனு​மன் மூலம்​தான் வந்​தது என்று கூறி​னார். பின்​னர் டைட்​டில் டீஸர் வெளி​யீட்​டின் போது ஏற்​பட்​ட தொழில்​நுட்ப கோளாறு காரண​மாக நிகழ்ச்சி அரை மணி நேரம் நிறுத்​தப்​பட்​டது.

இதனைத் தொடர்ந்து பேசிய ராஜமவுலி, ‘எனக்கு கடவுள் நம்பிக்கை இல்​லை. என் தந்​தை, ஹனு​மன் என் பின்​னால் இருப்பார் என்​றும் என்னை கவனித்​துக் கொள்​வார் என்​றும் சொன்​னார். அவர் இப்படித்​தான் கவனித்துக் கொள்கிறா​ரா? என் மனைவி ரமாவுக்​கும் ஹனு​மன் மீது பக்தி உண்​டு. அவர் மீதும் எனக்கு இப்​போது கோபம் வந்​தது’ என்றார். அவருடைய இந்​தப் பேச்சு இணையத்​தில் சர்ச்சையை ஏற்​படுத்தி இருக்​கிறது.

நிகழ்ச்​சி​யில் ஏற்​பட்ட தொழில்​நுட்​பக் கோளாறுக்கு ஹனுமனைக் குறை சொல்​வ​தா? என்​றும் ராமாயணத்​தின் அடிப்படை​யில் ‘வாரணாசி’ என்ற தலைப்​பில் படத்தை எடுத்​து​விட்டு இப்​படிச் சொல்​லலா​மா? என்​றும்​ கேட்​டு வருகின்​றனர்​. இதற்கு ராஜமவுலி விளக்கம் தருவாரோ? பார்க்கலாம்.!

rajamouli speech sparks controversy at varanasi movie meet
rajamouli speech sparks controversy at varanasi movie meet