சந்தியாவுக்கு சரவணன் செய்த உதவியால் சந்தியாவை கண்டமேனிக்கு திட்டி தீர்த்துள்ளார் சிவகாமி.

Raja Rani2 Serial Episode Update 20.10.21 : இரவில் சந்தியா அந்த பாஸ்போர்ட்டை பார்த்து கொண்டிருக்க அப்போது வந்த சரவணன் நீங்க கஷ்டப்படுற அளவுக்கு கூட சொந்தக்காரன் கவலைப்பட்டு இருக்கான் என கூறுகிறார். அவங்க நிலைமை என்னவோ என சந்தியா இந்த பாஸ்போர்ட் தொலைத்தவர் பற்றி கவலைப்படுகிறார்.

அதன் பின்னர் ஒரு ஐடியா என இந்த பாஸ்போர்ட்டை போட்டோ எடுத்து தன்னிடம் IPS அதிகாரியை பார்க்க சென்ற போது அந்த பெண் பொலிஸ் நம்பர் தன்னிடம் இருப்பதாகவும் அவர்களுக்கு அனுப்பி விடலாம் என கூறுகிறார். சரவணன் இப்போதைக்கு வேண்டாம் அம்மா கிட்ட சொல்லிட்டு அனுப்பிக்கலாம் என கூறுகிறார். சந்தியாவும் சரி என சொல்லி விடுகிறார். ஆனால் அவருக்கே தெரியாமல் அந்த போட்டோ பெண் போலீசுக்கு சென்று விடுகிறது.

திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில், இன்று அன்னாபிஷேகம் : பக்தர்களுக்கு அனுமதி

சந்தியாவுக்கு சரவணன் செய்த உதவி.. கண்டமேனிக்கு திட்டி தீர்த்த சிவகாமி - ராஜா ராணி 2 சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்

மறுநாள் காலையில் சந்தியாவிடம் அர்ச்சனா விளக்குல எண்ணெய் ஊறிட்டியா என கேட்க சந்தியாவும் பண்ணிட்டேன் என கேட்க சந்தியாவை குத்தி காட்டி பேச அப்போது பார்வதியும் அவருடைய அப்பாவும் அர்ச்சனாவை திட்டுகின்றனர். இந்த நேரத்தில் சிவகாமி சந்தியாவிடம் இரவு மீந்து போன சாப்பாட்டை வைத்து வடகம் போட சொல்கிறார். அது எனக்கு தெரியாதுன்னு சந்தியா கூறியும் அதனை நீ போட்டு இருக்கனும் என சிவகாமி கூறி விட்டு செல்கிறார்.

BIGG BOSS-ல சிலப்பேர் நடிக்குறாங்க.., கமல் Sir சண்டை போடணும் – Siddarth Open Talk..! | Agadam |Tamil

வடகம் போட தனக்கு உதவி செய்யுமாறு அர்ச்சனாவிடம் கேட்டும் அவர் என்னால் முடியாதுனு கூறி விடுகிறார். சந்தியா என்ன செய்வது என தெரியாமல் புலம்ப பின்னர் யூ ட்யூபில் பார்த்து வடகம் போட முடிவு செய்கிறார். வீடியோவை பார்த்து வடகம் போட முயற்சி செய்யும் போது சரவணன் வருகிறார். என்ன செய்கிறீங்க என கேட்க வடகம் போடுவதாக சொல்கிறார். எனக்கு தெரியாது என கூற தெரியாதுன்னு சொல்லி இருக்கலாமே என கூறுகிறார். நான் சொல்லியும் அத்தை நான் வரதுக்குள்ள பண்ணியிருக்கணும்னு சொல்லிட்டாங்க என கூற அதன் பிறகு சரவணன் உதவி செய்ய வடகத்தை செய்து முடிக்கிறார் சந்தியா.

இருவரும் சேர்ந்து வடகம் செய்து கொண்டிருந்த போது எதையும் செய்ய பயப்பட கூடாது என தன்னுடைய வாத்தியார் கூறியதாக கூறுகிறார் சரவணன். இருவரும் சேர்ந்து வடகம் போட்டு ரொமான்ஸ் செய்யும் காட்சியை பார்த்த அர்ச்சனா மாமியாரிடம் போட்டு கொடுக்க முடிவு செய்கிறார். சந்தியா வடகம் போட்டு இருப்பதை பார்த்து பாராட்டுகிறார் சிவகாமி. சந்தியா சரவணன் சொல்லி கொடுத்ததாக சொல்ல முற்பட்டும் அதனை சொல்ல விடாமல் செய்து விடுகிறார் சிவகாமி. அத்தை கிட்ட நடந்ததை சொல்லிடணும் இல்லைனா அது தேவையில்லாத பிரச்னையாகிடும் என யோசிக்கிறார் சந்தியா.

அதற்குள் அர்ச்சனா கிச்சனுக்கு வந்து சரவணன் மாமா தான் வடகம் போட சொல்லி தந்தார் என மாமியாரிடம் போட்டு கொடுக்கிறார். உடனே சந்தியாவை கூப்பிட்டு திட்டுகிறார் சிவகாமி. நாங்க இப்படி போனதும் சரவணை கூப்பிட்டு வடகம் போட்டு இருக்க.. நான் உன்கிட்ட உன்னதான போட சொன்னேன் என எரிந்து விழுகிறார் சிவகாமி. உன் புருஷனை கொஞ்சம் கூட ஒய்வு எடுக்க விட மாட்டுற என திட்டுகிறார். சந்தியா கண் கலங்க இத்துடன் முடிகிறது இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட்.