சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘புறநானூறு’ ஷூட்டிங் ஸ்டார்ட்: சுதாவிடம் ரசிகர்கள் கேட்கும் கேள்வி..
சிவகார்த்திகேயன் நடிப்பில், சுதா கொங்கரா இயக்கும் ‘புறநானூறு’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது. இது குறித்த அப்டேட்ஸ் பார்ப்போம்..
‘அமரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.
அதனையடுத்து, சிபி சக்கரவர்த்தி மற்றும் சுதா கொங்கரா இருவரது இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இதில், சுதா கொங்கரா இயக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று சனிக்கிழமை முதல், சென்னையில் தொடங்கியிருக்கிறது.
இப்படத்தில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இது சிவகார்த்திகேயனுக்கு 25-வது படமாகும் படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள பின்னி மில்லில் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக சூர்யா, துல்கர் சல்மான், நஸ்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்டது ‘புறநானூறு’.
இதன் முதற்கட்ட பணிகளின்போது சுதா கொங்கரா – சூர்யா இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இப்படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்க தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
புறநானூறு படத்தின் கதைக்கரு, ஹிந்தி மொழிக்கு எதிரான போராட்டாத்தை களமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
இது குறித்தும், இயக்குனர் சுதா தெளிவுபடுத்தினால் மட்டுமே சூர்யா-எஸ்கே ரசிகர்களுக்கும் தெரிய வரும். சொல்வாரோ.!