Puppy Review : Plus, Minus And Rating Stars Inside | Varun | Samyuktha Hegde | Yogi Babu | Puppy Movie Tamil Review | Puppy Review in Tamil
வருண், சம்யுக்தா, யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் முரட்டு சிங்கிள் நட்டு தேவ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் பப்பி.

Puppy Review : 

படத்தின் கதைக்களம் :

கல்லூரி மாணவரான வருண் காலேஜில் பிட்டு படம் பார்த்து பேரசிரியரிடம் மாட்டி கொண்டு சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.

அதன் பின்னர் இவரது வீட்டு மாடிக்கு மதுரையில் இருந்து சம்யுக்தா குடும்பம் வருகிறது. உணவு பிரியரான சம்யுக்தா வருடனுடன் சேர்ந்து சென்னையை சுற்றி சுற்றி சாப்பிடுகிறார். இவர்களுக்கு காதல் மலர்ந்தது. ஒரு தருணத்தில் கசமூஸாவும் நடந்து விடுகிறது.

இதனால் சம்யுக்தாவின் மாதவிடாய் சுயற்சி தள்ளி போக அவர் கற்பமடைந்து விட்டதாக எண்ணி இவர்களின் காதலில் பிரிவு ஏற்படுகிறது.

அதே போல் வருண் வளர்த்து வரும் பப்பி என்ற பெண் நாயும் கர்ப்ப காலத்திற்கு வந்து விடுகிறது.

அதன் பின்னர் இவர்களுக்கு இடையே என்ன நடக்கிறது? வருண் சம்யுக்தா பப்பியால் எப்படி சேர்கிறார்கள் என்பது தான் மீதி கதை.

அருமையா? அறுவையா? – சித்தார்த்தின் அருவம் விமர்சனம்.!

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

வருண், சம்யுக்தா நடிப்பு சிறப்பாக அமைந்துள்ளது.

யோகி பாபு காமெடி நம்மை சிரிக்க வைப்பது உறுதி.

தொழில்நுட்பம் :

இசை :

தரன் குமாரின் பின்னணி இசை சிறப்பு, பாடல்கள் ஓகே ரகம்.

ஒளிப்பதிவு :

தீபக் குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு மெருகேற்றியுள்ளது.

இயக்கம் :

முரட்டு சிங்கிள் நட்டு தேவ் அறிமுக இயக்குநராக இருந்தாலும் ரசிகர்களின் பல்ஸ் தெரிந்து திரைக்கதையை கொண்டு சென்று ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார்.

படத்தில் சில காட்சிகள் மட்டுமே 18+ மற்றபடி அனைத்துமே அனல்பறக்கும் காமெடி தான்.

தம்ப்ஸ் அப் :

1. காமெடி
2. வருண், சம்யுக்தா, யோகி பாபு நடிப்பு
3. இயக்கம்
4. திரைக்கதை

தம்ப்ஸ் டவுன் :

1. வழக்கமான லாஜிக்கல் தவறுகள்

REVIEW OVERVIEW
பப்பி விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
puppy-reviewமொத்தத்தில் பப்பி இக்காலத்து இளைஞர்களுக்கு காமெடியும் நல்ல கருத்தும் கொண்ட திரைப்படம்.