கோபி அபார்ஷன் பண்ண சொல்ல ராதிகா அடி வெளுத்தெடுத்துள்ளார். 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பழனிச்சாமி போட்டோவை பார்த்து பூமர் அங்கிள் மாதிரி இருக்கு என்று இனியா கிண்டல் அடிக்க பாக்யா அப்படியெல்லாம் சொல்லக்கூடாது அவர் நமக்காக எவ்வளவு உதவி பண்ணி இருக்காரு அவர் மனசு கஷ்டப்படும் இல்லையா என்று சொல்ல அப்படின்னா நீயே நல்லா இருக்குன்னு மெசேஜ் பண்ணு என்று சொல்கிறார். 

அதன் பிறகு பாக்கியா பழனிச்சாமிக்கு சட்டை எல்லாம் சூப்பரா இருக்கு என்று வாய்ஸ் மெசேஜ் அனுப்ப அதை கேட்ட பழனிச்சாமி திருப்பி திருப்பி கேட்டு சந்தோஷப்படுகிறார். நன்றி மேடம் மிக்க நன்றி என சொல்கிறார். பிறகு மேடம் எதுக்கு என்று தன்னுடைய போனில் பாக்கியலட்சுமி என பெயரை மாற்றுகிறார். 

இதை தொடர்ந்து இங்கே ராதிகா கோபியிடம் குழந்தை விஷயமா என்ன முடிவெடுத்து இருக்கீங்க என்று கேட்க அதான் உங்க அம்மா குழந்தை பெத்துக்க சொல்லிட்டாங்களே என்று சொல்கிறார். நீங்க என்ன முடிவெடுத்து இருக்கீங்க என்று கேட்க தாத்தாவாகி திரும்பவும் அப்பாவாக போறேன் எல்லாரும் என்ன சொல்லுவாங்க? பேசாம அபார்ஷன் பண்ணிடலாமா என்று கோபி கேட்க ராதிகா அதிர்ச்சியாகி தலையணை தூக்கி அடிக்கிறார்.

அடுத்ததாக கோபி சரி குழந்தை பெத்துக்கலாம். இனிமே அபார்ஷன்  பத்தி பேச மாட்டேன் என காலை பிடித்து விடுகிறார். பாக்கிய கர்ப்பமான போது நீங்க எப்படி பீல் பண்ணீங்க என்று கேட்க கோபி ரொம்ப சந்தோஷப்பட்டேன் அவளை எனக்கு பிடிக்காது ஆனால் குழந்தை வர போதுன்னு வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சேன் என்று சொல்ல பாக்கியா கர்ப்பமானால் சந்தோஷப்படுவீங்க நான் கர்ப்பமானால் அபார்ஷன் பண்ணனுமா என்று திரும்பவும் அடிக்கிறார். 

இந்த விஷயத்தை வீட்ல சொல்லணும் எப்போ சொல்லலாம் என்று கேட்க கோபி இப்போ ரொம்ப டயர்டா இருக்கு சாப்பிட்டு படுத்து ரெஸ்ட் எடுக்கலாம் இந்த விஷயத்தை காலையில பேசிக்கலாம் என்று சொல்கிறார். அடுத்ததாக செழியன் குழந்தையை வைத்துக் கொண்டு தாத்தா பாட்டியுடன் உட்கார்ந்து குழந்தையை கொஞ்சிக் கொண்டிருக்கும் போது கோபி ராதிகாவுக்கு பிரசவமாகி குழந்தையுடன் வீட்டுக்கு வருகிறார். 

ஈஸ்வரிடம் அம்மா உங்க பேர குழந்தை என்று காட்ட ஈஸ்வரி குழந்தைக்கு முத்தம் கொடுக்க ராமமூர்த்தி பேரன் பேத்தி எடுத்த பிறகு புள்ளை கேக்குதா திட்டுகிறார். பிறகு கோபி அண்ணன் செழியனை பாரு என குழந்தைக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். பதிலுக்கு செழியன் குழந்தையிடம் சித்தப்பாவை பாரு என்று கோபி குழந்தையை காட்டுகிறார். கோபி சித்தப்பாவா என்று கேட்க ராமமூர்த்தி எழிலுக்கு தம்பினா அவனுக்கு சித்தப்பா தானே என்று நக்கல் அடிக்கிறார். திடீரென கோபி என்ன சூடா இருக்கு என்று குழந்தையின் துணியை விலக்கிப் பார்க்க வாயிலேயே உச்சாவை அடிக்கிறது. கோபி தூக்கத்திலிருந்து அலறி எழுந்திருக்க அது கனவு என தெரிய வருகிறது. 

மறுநாள் காலையில் ராதிகா கோபியை அனுப்பி என்ன முடிவெடுத்து இருக்கீங்க என்று கேட்க எனக்கு ஒரு நாள் மட்டும் டைம் கொடு யோசிச்சு அதுக்கப்புறம் வீட்ல சொல்லிடலாம் என்று சொல்கிறார். பிறகு ராதிகா காபி போட வர பாக்யா கடுகு தாளிக்க இந்த ஸ்மெல் தாங்க முடியாமல் ராதிகா வாந்தி எடுக்க ஓடுகிறார். இதைப் பார்த்த செல்வி இந்த அம்மா என்ன புள்ளத்தாச்சு பொண்ணு மாதிரி தாளிப்பு வாசனைக்கு எல்லாம் வாந்தி எடுக்குது என கேட்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.