PT Selvakumar's Co Pooja
PT Selvakumar's Co Pooja

PT Selvakumar‘s Co Pooja : கொரோனா என்னும் கொடிய வைரஸ் இன்று உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. கண்ணுக்கு தெரியாத இந்த வைரஸை ஒழிப்பதற்காக இறை சக்தியால் முடியும் என்பதற்காக 58 பசுக்களுடன்,11 சுமங்கலி பெண்களை வைத்து ஐயர் மந்திரம் ஓத மெகா கோ பூஜை கலப்பை மக்கள் இயக்கம் தலைவர் PT செல்வகுமார் அவர்களால் நடத்தப்பட்டது.

மகா சக்தி புனிதமும் நிறைந்த ஆஞ்சநேயரால் அருளப்பட்ட சஞ்சீவி மலைக்கு கீழ் நடத்தப்பட்டது பெரும் விசேஷமாக கருதப்பட்டது. பசுக்களை நீராட்டி பசும்புல் வழங்கப்பட்டது.

பின்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலப்பை மக்கள் இயக்க தலைவர் PT செல்வகுமார் பேசியதாவது :

கொரோனா வேகமாக பரவி வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் விஞ்ஞானமும், மருத்துவமும் நமக்கு கைக்கொடுக்காத நேரத்தில் ஆன்மீகம் நம் மக்களை காப்பாற்றும் என்ற நம்பிக்கையிலே இந்த மெகா கோ பூஜையை நடத்தினோம்.

கோ பூஜைக்கு அத்தனை அற்புதங்கள் உண்டு. மக்கள் அனைவரும் பயத்துடனும், பதட்டத்துடனும் வாழ்ந்து வருகிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் சொல்வது பசியால் தமிழகத்தில் இனி யாரும் இறந்து விடக்கூடாது என்பது தான்.

சியான் 60 படத்திலும் தொடரும் தனுஷ் பட மேஜிக் – வெளியானது அதிரடி அப்டேட்

வருங்காலத்தில் பொருளாதார பிரச்சனையால் மக்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள் என்ற பயம் அனைவரிடத்திலும் இருந்து வருகிறது. இப்போதே வறுமையை காரணம் காட்டி நிறைய திருட்டு, கொலை போன்றவை நடைபெறுகிறது.

மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இனி காப்பாற்றுவதற்கு பொருளாதார விழிப்புணர்வு அவசியம் தேவை. சிறு தொழில், குறு தொழில், விவசாயம் செய்பவர்கள் மூச்சு திணறும் அளவுக்கு வறுமையால் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.

இவர்களுடைய வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். பூஜை முடிந்ததும் 100 பெண்களுக்கு தென்னங் கன்றுகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் யோகிராம் சுரத்குமார் சுவாமியடிகள் பொன் காமராஜ், அழகை பஞ்சாயத்து தலைவர் அசோக்குமார் மற்றும் கர்ணன், குமரி நெல்லை மாவட்ட கலப்பை பொறுப்பாளர் கார்த்திக் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.