PT Selvakumar Helps to Lady Auto Drivers
PT Selvakumar Helps to Lady Auto Drivers

150 பேருக்கு அரிசி மூட்டைகள் கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர் PT செல்வகுமார் உதவி ;

PT Selvakumar Helps to Lady Auto Drivers : தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக வறுமையால் வாடி அன்றாடம் வேலை செய்து வந்த பெண்கள் தங்கள் குடும்பத்தையும் குழந்தைகளையும் காப்பாற்ற முடியாமல் தவித்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் இக்கட்டான சூழ்நிலையில் கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர் PT செல்வகுமார் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

இந்த நேரத்தில் பெண்கள் ஆட்டோ சங்க தலைவர் பாரதி அவர்கள் 150 ஆட்டோ ஓட்டும் பெண்கள் குடும்ப வறுமையால் தவிக்கிறோம் எங்களுக்கு உதவுங்கள் என்று கலப்பை மக்கள் இயக்கத்தின் PT செல்வகுமார் அவர்களிடம் கோரிக்கை வைத்தார்கள்.

கட் அவுட் பேனர்களால் ஏற்படும் விபத்துகளை தடுக்க விஜய், ரஜினி, அஜித் குரல் கொடுக்க வேண்டும் – கலப்பை மக்கள் இயக்கம் வேண்டுகோள்

உடனடியாக கலப்பை மக்கள் இயக்கத்தின் சார்பாக திரைப்பட நடிகரும் இயக்குனருமான ரமேஸ்கண்ணா அவர்களையும், நடிகை அபர்ணாதி முன்னிலையில் வடபழனி சிகரம் ஹால் வைத்து 75ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கும், 75 துப்புரவு பணிப்பெண்களுக்கும் கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர் PT செல்வகுமார் அரிசி மூட்டைகளை வழங்கினார்.

இந்த நிகழ்வு தொடங்குவதற்கு முன்பாக மறைந்த மருத்துவர் சைமன் அவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்தி ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்தினார்கள்.

பெண்கள் இன்முகத்தோடும் மகிழ்ச்சியோடும் சமூக இடைவெளியை கடைபிடித்து மாஸ்க் அணிந்தும் இடைவெளி விட்டு அமர்ந்து பெற்றுக் கொண்டார்கள்.

நிகழ்வில் பங்கு பெற்று பேசிய இயக்குனர் ரமேஷ் கண்ணா அவர்கள் பேசியதாவது: ஒரு அரசு நினைத்தால் கூட இவ்வளவு அழகாக சமூக விலகலை கடைப்பிடித்து இப்படி ஒரு நிகழ்வை எடுக்க முடியாது. காலத்தால் செய்யக்கூடிய உதவி இது. எல்லோரும் பயந்து வீட்டிலே இருக்கிறார்கள். ஆனால் துணிச்சலாக PT செல்வகுமார் இந்த முயற்சியை கையிலெடுத்து செய்கிறார். குடும்ப அட்டை கூட இல்லாத பர்மா அகதிகளையும் தேடி பிடித்து உதவி செய்து அவர்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றுகிறார்.

கலப்பை மக்கள் இயக்கம் ஒரு தர்ம சிந்தனையோடு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அதற்க்கு பக்க பலமாக நாம் அனைவரும் கட்டாயம் நிற்க வேண்டும். ஏன் என்றால் கலப்பை மக்கள் இயக்கம் பெரிய அரசியல் கட்சி அல்ல. PT செல்வகுமார் ஒரு பத்திரிகையாளராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி இன்று தன்னுடைய கைக்காசை செலவழித்து தொண்டு செய்து வருகிறார். நேற்று ஆட்டோ ஓட்டும் ஆண்களுக்கும் உதவி செய்தார். அவருடைய சேவைக்கு தலை வணங்குகிறேன்.

உதவி செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதை பார்த்து அனைவரும் முன் வர வேண்டும் என்று கூறினார்.

அதன் பின்னர் பேசிய கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர் PT செல்வகுமார் தமிழகத்தில் இனி பசியால் ஒருவரும் இறந்து விடக் கூடாது. நாங்கள் செய்து வரும் உதவிகளை பார்த்து நாமக்கல்லில் ஒருவர் இதே போன்று செய்திருக்கார். மதுரை மேலூரிலும் ஒருவர் செய்திருக்கார். அவர் செய்த உதவியை குறுந்தகவல் அனுப்பியதோடு உங்கள் கலப்பை மக்கள் இயக்கத்தின் சேவையை பார்த்து தான் நாங்கள் இது போன்ற உதவிகளை வெளியில் வந்து செய்கிறோம் என்று கூறினார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நாம் செய்வதை பார்த்து பணிகள் விரிவடைகிறது. இது போன்று நல்ல எண்ணத்தோடு சேவை செய்பவர்களை இறைவன் ஆசிர்வதிக்க வேண்டும் என்று கூறினார்.

அதன் பின்னர் சிகரம் சந்திரசேகர் பேசியதாவது : எந்த நிகழ்வாக இருந்தாலும் மிகவும் சிறப்பாக செய்துவிடுவார்.‌ அது கஜா புயலாக இருக்கட்டும் ஓகி புயலாக இருக்கட்டும் நேரடியாகவே அந்த களத்திற்கு சென்று உதவிடுவார் PT செல்வகுமார்.

அவர் நினைத்திருந்தால் பாதுகாப்பாக வீட்டிலே இருக்கலாம். ஆனால் இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையோடு பயணிக்கிறார். அவரை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று கூறினார்.

இந்த அறிய நிகழ்ச்சிக்கு நடிகர் விஷால் தன்னுடைய ரசிகர் மன்ற செயலாளர் ஹரி மூலமாக 150 பெண்களுக்கும் மளிகை சாமான்களை வழங்கி உதவி செய்தார். இந்த உதவி வழங்கும் நிகழ்விற்கு சைகோ தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம், நெல்லை ரஜகை GJ செல்வதாஸ் அரிசி வழங்கி உதவினார்கள்.

இந்த நெகிழ்வான நிகழ்வை நடத்துவற்கு சிகரம் ஹால் “சிகரம் சந்திரசேகர்” மனநிறைவோடு தந்தார்.

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த ஆட்டோ சங்க உமா , மீனாட்சி , பவானி ஆகியோர் கண்ணீர் மல்க மகிழ்ச்சியோடு இயக்குனர் PT செல்வகுமார் அவர்களுக்கு நன்றி கூறினார்கள். இந்த நிகழ்ச்சியை மிக சிறப்பாக முன்னின்று நடத்திய கலப்பை மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், துணை தலைவர் நந்த குமார், செந்தில் பிரபு ,PRO ராஜ்குமார் ,kp சிவா, ஆகியோரும் உதவியுள்ளார்கள்.