தயாரிப்பாளராக களம் இறங்குகிறார் பிரதீப் ரங்கநாதன்..

Web Ads

தமிழ் சினிமாவில் லவ்டுடே, டிராகன், டியூட் என ஹாட்ரிக் வெற்றி பெற்றிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இயக்குநர், நடிகராக வலம் வரும் பிரதீப் இப்போது தயாரிப்பாளராகவும் மாறவுள்ளார். தொடர்ச்சியாக வெற்றிப் பாதையில் இருப்பதால், இவரது கால்ஷீட் தேதிகளுக்காக பல்வேறு தயாரிப்பாளர்கள் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், தயாரிப்பாளராகவும் களமிறங்க பிரதீப் ரங்கநாதன் முடிவு செய்திருக்கிறார். அவருடைய கதையை, அவரது உதவி இயக்குநர் இயக்கவுள்ளார். நாயகியை மையப்படுத்திய இக்கதையில் மமிதா பைஜு நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. ஒரே கட்டமாக படத்தை முடிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

Web Ad 2

அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் யாருடைய இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது முடிவாகவில்லை. இதற்காக பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் தான் இயக்கி நடிக்கவிருந்த படத்தினை, 6 மாத காலத்துக்கு ஒத்திவைத்துள்ளார் பிரதீப். இதற்கிடையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள ‘எல்ஐகே’ படம் ரிலீஸ் ஆகவுள்ளது.

producer pradeep ranganathan movie updates
producer pradeep ranganathan movie updates