பிரியங்கா நல்காரியின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மதியம் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி.

இந்த சீரியலைத் தொடர்ந்து இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் என்ற சீரியலில் சீதா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த சீரியலுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில் தனது நீண்ட நாள் காதலர் ராகுலை ரகசிய திருமணம் செய்து கொண்ட இவர் தன்னுடைய கணவரின் வேண்டுகோளுக்காக சீரியலில் இருந்து வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து சீதாராமன் சீரியலில் பிரியங்காவுக்கு பதில் மிக மிக அவசரம் படத்தில் பெண் காவலாளியாக நடித்த ஸ்ரீ பிரியங்கா நடிக்க உள்ளார். அதே சமயம் பிரியங்கா நல்காரி தற்போது தன்னுடைய கணவருடன் மலேசியாவில் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

சமூக வலைதள பக்கங்களில் தினம் தினம் போட்டோக்களை வெளியிட்டு வரும் இவர் ஏழு வருடத்திற்கு முன்னர் மலேசியாவில் எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டுள்ளார்.

இப்போது கொஞ்சம் குண்டாக இருக்கும் பிரியங்கா நல்காரி ஏழு வருடத்திற்கு முன்னர் செம ஸ்லிம்மாக க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் இந்த போட்டோவை பார்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.