பிரியங்கா சோப்ரா கணவரை பிரிந்து விட்டதாக வெளியான தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

Priyanka Chopra About Divorce Controversy : தமிழ் சினிமாவின் தமிழன் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. இந்த படத்தை தொடர்ந்து இவர் பாலிவுட் பக்கம் சென்று அங்கு முன்னணி நடிகையாக வலம் வரத்தொடங்கினார்.

பாலிவுட் மட்டுமல்லாமல் ஹாலிவுட் படங்களிலும் நடிக்கத் தொடங்கிய இவர் ஹாலிவுட் இசைக் கலைஞர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது காதல் கணவர் பிரியங்காவை விட வயதில் சிறியவர் என்பது அனைவருக்கும் ஆச்சரியமான ஒன்று.

என் அம்முக்குட்டி, என் பொம்முக்குட்டி, என் புஜ்ஜிக்குட்டி.. பூனையுடன் ஒரு மேட்ச் : கோலி பதிவு வைரலாகிறது..

திருமணத்திற்குப் பின்னரும் படங்களில் நடித்துவரும் பிரியங்கா சோப்ரா கணவருடன் விதவிதமான இடங்களுக்குச் சென்று புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் இவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தன் பெயருக்கு பின்னால் இருந்து தன்னுடைய கணவரின் பெயரை நீக்கினார்.

கேரளவே நம்மளை பாராட்டுது – Anbil Mahesh Poyyamozh Speech | iSpark TV for Skills Development

இதனால் இவர் கணவரை விவாகரத்து செய்து விட்டதாக தகவல் பரவிய நிலையில் தன்னுடைய பெயருக்கு பின்னால் கணவரின் பெயரை மட்டும் தான் நினைக்கிறேன் கணவரிடம் இருந்து விவாகரத்து பெறவில்லை. இருவரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம் விவாகரத்து பற்றி வெளியான தகவல் உண்மையில்லை என விளக்கம் அளித்துள்ளார்.