பிரின்ஸ் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சாங் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ள ‘டான்’ திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘பிரின்ஸ்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ், நடிகை மரியா ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை சுரேஷ் ப்ரோடுக்ஷன் உடன் இணைந்து சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பிம்பிளிக்கி பிளாப்பி... பிரின்ஸ் மூவி ஃபர்ஸ்ட் சிங்கிள் சாங் - ஃபுல் வீடியோ வைரல்.

மேலும்மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசை அமைத்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மட்டும் டைட்டில் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து இருந்தது.

பிம்பிளிக்கி பிளாப்பி... பிரின்ஸ் மூவி ஃபர்ஸ்ட் சிங்கிள் சாங் - ஃபுல் வீடியோ வைரல்.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான “பிம்பிளிக்கி பிளாப்பி” என்கின்ற பாடலின் க்ளிப்ஸ் வீடியோவை வெளியிட்டு இன்று மாலை 4:05 மணிக்கு முழு பாடல் வெளியாகும் என்கின்ற தகவலை படகுழு தெரிவித்திருந்தது. அதன்படி இப்பாடலின் முழு வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

Prince - Bimbilikki Pilapi Lyric Video (Tamil) | Sivakarthikeyan | Thaman S | Anirudh | Anudeep K.V