முன் பதிவால் அறிவிப்புக்கு முன்னரே பீஸ்ட் திரைப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது பற்றி தெரிய வந்துள்ளது.

Pre Release Collection of Beast Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் திரைப்படம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி வெளியாகிறது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தின் முன்பதிவு டிக்கெட் புக்கிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல திரையரங்குகளில் தற்போது முன்பதிவு டிக்கெட்டுகளை விற்று தீர்ந்து உள்ள நிலையில் இதுவரை இந்தப் படம் முன்பதிவுகள் மூலம் ரூபாய் 6 கோடி வரை வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் பல பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கவில்லை. இப்படி அனைத்து திரையரங்குகளிலும் முன்பதிவுகள் தொடங்கப்பட்டால் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.