தனது வெற்றிக்கு காரணம்: பிரதீப் ரங்கநாதன் விளக்கம்..

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டியூட்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் பிரதீப் ரங்கநாதனிடம், ‘உங்களது வெற்றிக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள். கடின உழைப்பா அல்லது அதிர்ஷ்டமா? என கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பிரதீப் கூறிய பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘கடின உழைப்பு இருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே யோசித்து வருகிறேன். அதில் எல்லாவற்றிலும் எனக்கு கிடைக்கும் அன்பு முக்கிய காரணம். என்னைப் போன்ற திறமையானவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை நான் பார்த்திருக்கிறேன்.
ஆனால், எனக்கு இது நடந்தது கடவுளின் கருணையால் என நினைக்கிறேன். எனவே இது கடின உழைப்பு மற்றும் கடவுளின் கருணை இரண்டுமே முக்கிய காரணம். அதேபோல் மக்களும் என்னில் அவர்களை பார்க்கிறார்கள்’ என தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 17-ந்தேதி வெளியாகவுள்ள ‘டியூட்’ படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன். மமிதா பைஜு, சரத்குமார், ரோகிணி உள்பட பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
